
Bai Se யில் உள்ள சிறுபான்மை தேசிய இன மக்கள்
சீனாவில், சிறுபான்மை தேசிய இனங்கள் பெரும்பாலும் எல்லைப் பிரதேசத்தில் வாழ்கின்றன. அவற்றின் பொருளாதாரம் ஒப்பீட்டளவில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. கடந்த பல்லாண்டுகளில், நிதி, வரிவசூலிப்பு, நாணயம், தேசிய நில வளப் பாதுகாப்பு முதலியவற்றில் நடுவண் அரசு, தேசிய இனத் தன்னாட்சி இடங்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை வகுத்துள்ளது. தற்போது, தேசிய இன வளர்ச்சிக்கு உதவிட, மத்திய அரசு, ஒரு லட்சம் கோடி யுவானை ஒதுக்கி வைத்துள்ளது.
சுவாங் இனத்தை சேர்ந்த Long Yuan Wei, சீன சமூக அறிவியல் கழகத்தின் அறிஞராவார். நீண்டகாலமாக தேசிய இனப் பிரதேச பொருளாதார ஆய்வில் அவர் ஈடுபட்டு வருகின்றார். நிறைய ஆய்வில் ஈடுபட்டுள்ள காரணமாக சிறுபான்மை தேசிய இனத்தவர் கூடிவாழும் இடங்கள் பலவற்றுக்கும் அவர் சென்றிருக்கின்றார். அண்மையில், சுவாங் இனம் திரண்டு வசிக்கும் குவாங் சியின் Bai Se பிரதேசத்திற்கு அவர் அண்மையில் போனார். பெய்சிங்கில் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்துள்ள அவர், "எதிர்பாராதது" எனவும் "அதிர்ச்சி" எனவும், தம் ஊரில் ஏற்பட்ட மாற்றத்தை வர்ணித்தார். இந்த ஆண்டுகளில், தேசிய இனப் பிரதேசத்தின் மாற்றம், எவ்வளவோ பெரியது என அவர் கூறினார்.
1 2 3
|