
தேசிய இனப் பிரதேசம், பொருளாதாரம் பின்தங்கிய நிலையிலுள்ள பிரதேசமாகும். இப்போது, பல தேசிய இனப் பிரதேசங்களில் நெடுஞ்சாலை போக்குவரத்து வசதி உள்ளது. தொலைபேசி பயன்படுகின்றது. வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மக்கள் கேட்டும் கண்டும் களிக்க முடிகிறது. மக்கள் வாழ்க்கையில் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது, உண்மையே.

தேசிய இன பிரதேச மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் அதே வேளையில், சீன அரசு, அங்கு கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, தேசிய இன தன்னாட்சிப் பிரதேசத்தின் கல்வித்துறை வளர்ச்சிக்கும் உதவி அளித்துள்ளது. எடுத்துக்காட்டாக, 9 ஆண்டுகால கட்டாயக் கல்வியை பரவலாக்குதல், சிறுபான்மை தேசிய இனப் பிரதேச மாணவர்களுக்கு கல்வி கட்டணம் விலக்கப்படுவது ஆகியவை அடங்கும். தவிரவும், சிறுபான்மை தேசிய இன திறமைசாலிகளுக்கு பயிற்சி தருவதற்காக 13 தேசிய இன உயர் கல்வி நிலையங்களும் சீனாவில் நிறுவப்பட்டுள்ளன.
தேசிய இனப் பிரதேச தன்னாட்சி அமைப்புமுறையினால், பல்வேறு சிறுபான்மை தேசிய இனங்கள், அரசு மற்றும் வட்டார விவகார நிர்வாகத்தில் கலந்து கொள்ளும் உரிமைக்கு உத்தரவாதம் செய்யப்படுகின்றது. இப்பிரதேசத்து பொருளாதார, கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சியை இது விரைவுபடுத்தியுள்ளது. சீனாவின் தேசிய நிலைமைக்குப் பொருந்திய, அடிப்படை அரசியல் அமைப்பு முறையாகும் இது என்பதை உண்மைகள் உறுதிப்படுத்துகின்றன. 1 2 3
|