• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-25 21:49:49    
புல்வெளியில் புதிய எரியாற்றலின் பயன்பாடு

cri

உள்மங்கோலியா

சீனாவின் வடபகுதியில் அமைந்துள்ள உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் விசாலமான புல்வெளியில், இடையர்களின் குடியிருப்புப் பிரதேசத்தில் நீங்கள் நுழைந்ததும், வீட்டுக்கு முன்னும் பின்னும் சூரிய வெப்ப ஆற்றல் பலகை மற்றும் காற்றாடி ஆலை இயந்திரம் போன்ற காற்று வள மின்னாக்கிகளை காணலாம். புல்வெளியில் வாழ்கின்ற இடையர்கள், அவற்றைச் சார்ந்து, உள்ளூர் பிரதேசத்தின் செழிப்பான சூரிய ஒளி மற்றும் காற்று ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றி, வாழ்க்கையிலும் உற்பத்தி நடவடிக்கைகளிலும் இதை பயன்படுத்துகின்றனர்.

உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசம் விசாலமாக இருக்கின்றது. இதன் நிலப்பரப்பு சுமார் 12 லட்சம் சதுர கிலோமீட்டர். இது, நாட்டின் மொத்த நிலப்பரப்பில், எட்டில் ஒரு பங்குக்கு அதிகமாகும். இதில், புல்வெளியின் நிலப்பரப்பு 70 விழுக்காடாகும். பரந்துபட்ட கால் நடை வளர்ப்பு பிரதேசங்களில், இடையர்கள் சிதறி வாழ்கின்றனர். வீடுகளுக்கு இடையே இடைவெளி சில கிலோமீட்டர் தொலைவாகும். இப்பிரதேசங்களில் ஒரு கிலோமீட்டர் மின்சார கம்பியின் விலை சுமார் 40 ஆயிரம் யுவானாகும். புல்வெளியில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்ற இடையர்கள், எண்ணெய் விளக்கைப் பயன்படுத்தி வருகின்றனர். தமது மங்கோலிய கூடாரத்தில், மின்சார விளக்கு பயன்படுத்தப்பட முடியும் என்று அவர்கள் கனவு கண்டு வருகின்றனர்.

Dong wuzhumuqin Bannerயின் இடையர்

Dong wuzhumuqin Banner, கால் நடை வளர்ப்புத்துறையினால், சீனாவில் புகழ் பெற்றது. அங்கு பசுமையான மேய்ச்சல் நிலங்கள் இருக்கின்றன. அங்குள்ள இடையர்கள் செல்வமடைந்துள்ளனர். ஆனால், மின்சார பற்றாக்குறையினால், நவீன நாகரிக உற்பத்தி மற்றும் வாழ்க்கை முறையை அவர்களால் அனுபவிக்க முடிய வில்லை. இடையர் Chaolun Bater கூறியதாவது:

"தற்போது, அனைத்துக்கும் மின்சாரம் தேவை. எங்கள் கால் நடை வளர்ப்புப் பிரதேசத்தில், மின்சாரப் பற்றாக்குறை. மின்சாரம் கிடைத்தால், எங்கள் வாழ்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கும்." என்றார் அவர்.

1  2  3