• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-25 21:49:49    
புல்வெளியில் புதிய எரியாற்றலின் பயன்பாடு

cri

உள்மங்கோலியாவில், காற்று ஆற்றல் மற்றும் சூரிய வெப்ப ஆற்றல் மிகவும் அதிகம். காற்று ஆற்றல் பயன்படுத்துவதில் சீனாவில் முதலிடம் வகிக்கின்றது. சூரிய வெப்ப ஆற்றல், சூரிய கதிர் வீச்சு ஆகியன, நாட்டில் உள்ள மொத்த படிவுகளில் 2வது இடம் வகிக்கின்றன. போதிய காற்று ஆற்றல் மற்றும் சூரிய வெப்ப ஆற்றல், உள்மங்கோலியாவின் புது முறை எரியாற்றலின் வளர்ச்சிக்கும் பயன்பாட்டுக்கும் நல்ல நிலைமையை தந்துள்ளன. ஒதுக்குப்புறமான கால் நடை வளர்ப்புப்பிரதேசங்களின் எரியாற்றல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, 1980ஆம் ஆண்டுகளில், உள்மங்கோலியத்தன்னாட்சி பிரதேசத்தில் புது முறை எரியாற்றலின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டுப் பணிகள் துவங்கின. இதற்காக, அரசு பெரும் முதலீடு செய்துள்ளது. 20 ஆண்டுகால முயற்சிகள் மூலம், இப்பிரதேசத்தில் புது முறை எரியாற்றலின் அறிவியல் ஆய்வு, செய்து காட்டல், உற்பத்தி, பரவல் ஆகியவை பயன் பெற்றுள்ளன. காற்று வள மின்னாக்கி, சூரிய வெப்ப ஆற்றல் இயந்திரம் ஆகியவை, கால் நடை வளர்ப்புப் பிரதேசங்களில் அடிப்படையில் பரவலாக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் பிரதேசத்தில் காற்று ஆற்றல் மற்றும் சூரிய வெப்ப ஆற்றல் பரவியுள்ளத் தனிச்சிறப்பியல்பை அறிவியல் தொழில் நுட்ப பணியாளர்கள் ஆராய்ந்து, கடந்த நூற்றாண்டின் 90ஆம் ஆண்டுகளின் இறுதியில், சிறிய ரக காற்று ஆற்றல்-சூரிய வெப்ப ஆற்றல் இணைந்த மின்னாக்கி முறையை உருவாக்கினர். தற்போது, உள்மங்கோலியாவிலுள்ள 10 Bannerகள் மற்றும் மாவட்டங்களில், 200க்கு அதிகமான காற்று ஆற்றல்-சூரிய வெப்ப ஆற்றல் இணைந்த மின்னாக்கி கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. நகரங்களில் வாழும் மக்கள் போல், புல்வெளியில் வாழ்கின்ற இடையர்களும் மின்சார விளக்கைப் பயன்படுத்துகின்றனர். தவிர, சூரிய வெப்ப ஆற்றல் மற்றும் காற்று ஆற்றல் உற்பத்தி செய்யும் மின்சாரம் பல உற்பத்தி நடவடிக்கைகளில் பயன்படுகின்றது. கால் நடை வளர்ப்புத்துறையின் இயந்திரமயமாக்கம் நனவாகியுள்ளது.

1  2  3