• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-30 09:21:04    
வாணவெடி நகரம் லியு யாங்

cri

சீனாவில், லியு யாங் நகரம், வாணவெடி நகரமென அழைக்கப் படுகின்றது. இந்நகரில் உற்பத்தி செய்யப்படும் வாணவெடிகள் பல வண்ணங்களைக் கொண்டவை. மிகவும் அழகானவை. தவிர, இந்நகருக்கு ஊடாகச் செல்லும் லியு யாங் ஆறும் புகழ்பெற்றது. இவ்வாற்றின் பெயரே இந்நகரின் பெயராக அமைந்துள்ளது. லியு யாங் ஆறு நெடுகிலும் அழகான இயற்கை காட்சிகள் காணப்படுகின்றன. கொத்து மலர்ச் செடிவகை கற்கள், லியு யாங் ஆற்றின் அடிவாரத்தில் மட்டுமே உருவெடுக்கின்றன. வளரும் கல்லாகும். தலைமுறை தலைமுறையாக லியு யாங் ஆற்றுக் கரையில் வாழ்ந்துவரும் துசின்சி அம்மையார் இது பற்றி கூறுகின்றார்.

இந்தக் கொத்து மலர்ச் செடிவகை கல், எங்கள் லியு யாங்கின் சுதேசப் பொருளாகும். ஆற்றின் அடியில் உருவாகும் இக்கல், எங்கள் கைவினைச்சிற்பிகளால் செதுக்கப்பட்ட பின், அழகிய கைவினைப் பொருட்களாக மாறிவிடும். இந்தக் கல், உலகில் மிகவும் பிரபலமானது. இவற்றில் ஒன்றுக்கு மிக உயர்ந்த விலை, ஒரு லட்சத்துக்கும் அதிகமான யுவானாகும். அல்லது 2 லட்சம் யுவான் என்ற விலையில் விற்கப்படும் என்றார் அவர். இத்தகைய கல்லின் மலர் உருவம் 20 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவாகியது. அதன் வடிவம், கொத்து மலர்ச் செடிவகையின் இதழ் போல இருப்பதால், கொத்து மலர்ச் செடிவகை என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.சுமார் 400 ஆண்டுகளுக்கு முன், லியு யாங் சிற்பிகள் இத்தகைய கல்களைத் தோண்டியெடுக்கத் துவங்கினர். அவர்கள், கல்லின் இயற்கையான வடிவத்துக்கேற்ப, மலை, நீர், மலர், பறவை, மனிதர் உள்ளிட்ட வேறுபட்ட வடிவங்களிலான சிற்பங்களைச் செதுக்கியிருக்கின்றனர்.1915ஆம் ஆண்டு நடைபெற்ற பனாமா பன்னாட்டுப் பொருட்காட்சியில் லியு யாங் மூத்த கலைச் சிற்பி தெய் சிங்சன் செதுக்கிய மறைப்புத்திரை தங்கப்பரிசு பெற்றது. எங்கள் செய்திமுகவர் லியு யாங்கில் கண்ட மிகப் பெரிய கல் சிற்பத்தின் பரப்பளவு 8 சதுர மீட்டராகும். பச்சை நிறக் கல்லின் அடியில் டிராகன் ஒன்று செதுக்கப்பட்டிருக்கின்றது. டிராகன் உடம்பில் பத்துக்கும் அதிகமான வெண்ணிற கொத்து மலர்கள் உள்ளன. அதிகமான இதழ்கள், நடுவிலிருந்து வெளியே நோக்கி வளரும் காட்சி கவர்ச்சிகரமானது. மிக சிறப்பாக உள்ளது.

1  2  3