• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-29 22:08:42    
நாடு திரும்பிய திபெத் இனத்தவர் இசிபான்தானின் வாழ்கை

cri

திபெத் தலைநகரான லாசாவின் பரபரப்பான வணிக சாலையில் சில கோப்பி கடைகள் அமைந்துள்ளன. நாள்தோறும் நண்பகல் சாகொகான்சு இசிபான்தான் எனும் திபெத் இன முதியவர் கோப்பி கடையில் வாசனை வீசும் கோப்பி அருந்தி விட்டு வீடு திரும்புவார்.

சாகொகான்சு இசிபான்தான், திபெத்தில் புகழ்பெற்ற திபெத்தின வழி புத்த மத கோயிலான சாய்பான் கோயிலின் ஒரு உயிருள்ள புத்தராக இருந்தார். 7 வயதிலிருந்து திபெத் இன மொழி இலக்கியத்தையும் புத்த மத இயலையும் படிக்கத் துவங்கினார். 20 வயதில் திபெத்தின வழி புத்த மதத்தின் கூசி எனும் பட்டம் பெறுவதற்கான தேர்வில் வெற்றி பெற்றார். அவர், பல்வகைகளிலும் கல்வி அறிவுமிக்கவர். அருங்செயலை ஆற்றிய மதகுரு ஆவார்.

தொடர்ந்து படித்து, மேலும் உயர் புத்தமத பட்டம் பெறும் தேர்வில் ஈடுபடவிருந்த போது, அவர் இருக்கும் கோயிலில் மாற்றம் ஏற்பட்டதினால், அவர் தாய்நாட்டை விட்டு வெளியேறி அந்நிய நாட்டில் வாழ வேண்டி ஏற்பட்டது. வெளிநாட்டில் தங்கியிருக்கும் முதல் சில ஆண்டுகளில், அவர் அமைதியற்ற முறையில் வாழந்து வந்தார். பின்னர், மத்திய ஐரோப்பாவின் மலை தொடர் நாடான ஸ்விட்சர்லாந்தில் குடியேறினார். அமைதி வாழ்க்கை அப்போது துவங்கியது. ஸ்விட்சர்லாந்து சென்றடைந்த துவக்க காலத்தில், பெரும் பனி பெய்ந்து ஒரே வெள்ளை நிறம் தென்பட்டது. வெள்ளை வெளேர் என்ற பனி அடர்ந்த மலைகளும், குளிரான காற்றும், திபெத்தின் அழகான குளிர்காலத்தை அவரின் நினைவுக்கு கொண்டு வந்தது. அவர் உணர்ச்சிவசப்பட்டு கூறியதாவது:

ஸ்விட்சர்லாந்து நாடு, மிகவும் எழிலானது. இருப்பினும், அது என்னுடைய ஊர் அல்ல. மொழி பிரச்சினையும் பழக்க வழக்கங்களின் வித்தியாசமும் என்னை வேறு உலகத்தில் இருப்பதாக செய்கின்றன. அங்குள்ள குளிர்காலம், எவ்வளவோ நீண்டது. பனி பெய்ந்து பெய்ந்து ஓயவில்லை. அப்போது, நான் எனது ஊரை அதிகம் நினைத்துப் பார்க்கத் தொடங்கிவிடுவேன் என்றார்.

இசிபான்தான், ஸ்விட்சர்லாந்தில் 28 ஆண்டுகாலம் வாழ்ந்தார். அங்கேயே ஒரு பெண்ணை மணம் செய்தார். குழந்தை பெற்றார். அன்றாட வாழ்க்கைக்காக உழைத்தார். அப்போது, அவர் மருத்துவ மனை ஒன்றில் முதிய நோயாளிகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டார். நாள்தோறும் நோயாளிகளுடன் உரையாடுவார். அவர்களை பராமரிப்பார்.

1  2  3