• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-29 22:08:42    
நாடு திரும்பிய திபெத் இனத்தவர் இசிபான்தானின் வாழ்கை

cri

திபெத் இன மகளிர்

சிறு வயதிலேயே புத்த மதவியலைப் படிக்கத் துவங்கியதால், அவர் நல்லெண்ணம் கொண்டவர். எனவே, இங்கு பணிபுரிய மிகவும் விரும்புகின்றார். பலரை நண்பர்களாக்கினார். வெளிநாட்டில் அமைதி வாழ்க்கை நடத்தியிருந்தாலும், அவரது மனதில் எப்பொழுதும் திபெத் தான், நினைவாக இருந்து வருகிறது. வெளிநாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு திபெத் இனத்தவரும் வானொலி, இதழ்கள் ஆகியவற்றின் மூலம், திபெத்தில் ஏற்பட்ட மாற்றத்தில் கவனம் செலுத்தியுள்ளனர். வாய்ப்பான நேரத்தில் தமது ஊர் திரும்ப வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர் என்றார் அவர்.

இசிபான்தானும் அப்படியே, சொந்த ஊருக்குத் திரும்பி உற்றார் உறவினர்களுடன் கூடி வாழ விரும்புகின்றார். 1993ம் ஆண்டு, அவரது மனைவி திடீரென கடும் நோய்வாய்ப்பட்டார். சிகிச்சை பெறவும் ஊருக்குத் திரும்புவதென்ற மனைவியின் விருப்பத்தை நனவாக்கவும், 1994ம் ஆண்டில் அவர் தம் மனைவியுடன் ஸ்விட்சர்லாந்து நாட்டை விட்டு, லாசாவுக்குத் திரும்பினார். இம்முறை ஊருக்கத் திரும்புவது என்பது, மனைவியின் இறுதி விருப்பத்தை நனவாக்கியது எனக் கூறலாம் என்றார். அவர் கூறியதாவது:

ஊர் திரும்பி, திபெத் இன மருத்துவரிடமிருந்து சிகிச்சை பெற்ற பின், மனைவி விரைவாக குணமடைந்தார். அவள் மிகவும் ஆனந்தமடைந்தார். ஆனால், 2001ம் ஆண்டில் தடுமம் ஏற்பட்டு, கடும் காய்ச்சலினால் அவள் மரணமடைந்தார். வாழ்வின் இறுதி தருணத்தில் ஊர் திரும்ப முடிந்ததால், அவள் அமைதியாக உலகை விட்டுச் சென்றார் என்றார்.

திபெத்தில் ஏற்பட்டுள்ள மாபெரும் மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, திபெத்தில் குடியேற இசிபான்தான் முடிவு செய்தார். இதுவரை, பனி அடர்ந்த பீடபூமியில் அவர் பத்து ஆண்டுகளாக வாழ்ந்துள்ளார்.

கடந்த பல பத்து ஆண்டுகளில் திபெத்தில் காணப்பட்டுள்ள பெரும் மாற்றங்களை நேரில் உணர்ந்து கொள்ள, அவர் ஊரின் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்ப்பது வழக்கம். அவர் சென்ற இடமெங்கும், சீரான மாடி கட்டிடங்கள் இங்கும் அங்குமாக நிற்பதையும், சமமான கறுப்பு நிற தார்ச்சாலைகள் நான்கு பக்கங்களிலும் நீண்டு செல்வதையும் கண்டு, தற்போதைய வாழ்க்கை மிகவும் இன்பமாயிருப்பதாக அவர் உணர்ந்து கொண்டார்.

1  2  3