• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-08 14:05:29    
பெய்சிங்கில் குவெய் இன குடியிருப்பு

cri

பெய்சிங்கின் தெற்கிலுல்ள நியு சியே எனும் இடத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான குவெய் இன மக்கள் கூடிவாழ்கின்றனர். அங்குள்ள கட்டிடங்கள் உணவுப்பொருள் எல்லாம், இஸ்லாமிய பாணியிலானவை.

நியு சியே சாலையில், பல கட்டிடங்களின் உச்சி, இஸ்லாமிய பாணியில் காணப்படுகின்றது. அவற்றின் நிறம், முக்கியமாக, முஸ்லிம்கள் விரும்பும் வெள்ளை மற்றும் பச்சை நிறமாகும். முன்பு, இச்சாலை மிகவும் இடுக்கமான ஒரு சிறு சந்து போல இருந்தது. வீதியின் இருமருங்கிலும் சிறிய கற்களால் கட்டப்பட்ட தாழ்ந்த குட்டையான பாழடைந்த வீடுகள். வசிப்பிட வசதி மிகவும் மோசமானது. "உணவு கவலையில்லை. ஆடை கவலையில்லை. வீடு தான் ஒரே கவலை" என்று அப்போது மக்கள் கூறி வந்தனர்.

1997ம் ஆண்டு, பெய்சிங் மாநகராட்சி அரசின் நிதியுதவியுடன், இப்பிரதேசம் சீரமைக்கப்படத் துவங்கியது. பல்லாண்டுகால கட்டுமானம் மூலம் முந்தைய தோற்றம் கலைந்து, தேசிய இன தனித்தன்மை வாய்ந்த புதிய குடியிருப்பு உருவெடுத்தது. அங்கு வசிக்கும் Qian Yan Yi அம்மையார் எங்களுக்குத் தெரிவித்ததாவது:

"பாழடைந்த வீடுகள் சீரமைக்கப்பட்டதற்குப் பிறகு, அகலமான ஒளிமயமான புதிய மாடி கட்டிடங்களில் மக்கள் குடியேறினர். முன்பு ஏழு, எட்டு மீட்டர் அகலமுடைய சாலை, தற்போது 40 மீட்டர் அகலமாக விரிவாக்கப்பட்டது. அதன் இருபக்கங்களிலும், பேரங்காடி, உணவு விடுதி உள்ளிட்ட பல்வகை முஸ்லிம் உணவுப் பொருள் விற்கும் தொடரமைப்பு உருவாயிறறு. குவெய் இன துவக்க நிலை பள்ளி, குவெய் இன இடைநிலைப் பள்ளி, குவெய் இன மருத்துவமனை, 400 பேர் தங்கக்கூடிய தேசிய இன முதியோர் இல்லம் ஆகியவை நியு சியே வீதியில் அமைந்துள்ளன. எனவே, பண்பாடு, மருத்துவசிகிச்சை, வாழ்க்கை எல்லாவற்றிலும் சிறுபான்மை தேசிய இன மக்களுக்கு வசதியான, சொகுசான சூழல் வழங்கப்பட்டுள்ளது." என்றார் அவர்.

மிக அதிகமான குவெய் இனத்தவர் கூடிவாழ்வது தவிர, அங்குள்ள பிரபலமான நியு சியே மசூதி காரணமாக, நியு சியே சாலை இவ்வளவு புகழ் பெற்றுள்ளது. பெய்சிங்கில் நீண்டகால வரலாறுடைய, மிகப்பெரிய பண்டைய மசூதி, இதுவாகும். இது தொடர்ந்து விரிவாக்கப்பட்டு, சீரமைக்கப்பட்டு வருவதினால், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறுடைய இம்மசூதி, வடக்கு சீனாவில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் முக்கிய இடங்களில் ஒன்றாகியுள்ளது.

குவெய் இனத்தவர் எண்ணிக்கை, நியு சியே குடியிருப்புப் பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியாக உள்ளது. குவெய் இன மக்கள் அநேகமாக இஸ்லாமிய மத நம்பிக்கையுடையவர்கள், கோயில் சுற்றுப்புறங்களில் வசிப்பதென்ற வழக்கம் அவர்களுக்கு உண்டு. நியு சியே சாலையில் வாழும் முஸ்லிம்கள், இப்பாரம்பரியத்தை இன்னமும் நிலைநிறுத்துகின்றனர். நாள்தோறும் பலர் பள்ளிவாசலில் தொழுகை புரிவர். நியு சியே பள்ளிவாசலின் பொறுப்பாளர் Yin Guo Fang எடுத்தக்கூறியதாவது:

"பள்ளிவாசலில் வாரத்துக்கு ஐந்து முறை தொழுகை நடைபெறுகிறது. ஒவ்வொருமுறையிலும் சுமார் 100 முதல் 150 பேர் தொழுகையில் கலந்து கொள்கின்றனர். நோன்புத் திருநாளில் ஈராயிரத்துக்கும் அதிகமானோர் வருவர்" என்றார்.

1  2  3