• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-08 14:05:29    
பெய்சிங்கில் குவெய் இன குடியிருப்பு

cri

குவெய் இன மகளிர்

கல்வியில் இக்குடியிருப்புப்பிரதேசம் சிறப்பு கவனம் செலுத்துகின்றது. ஒவ்வொரு ஆண்டின் ஆசிரியர் விழா நாளில், பளளி ஆசிரியர்கள் குடியிருப்புக்கு வந்து அன்பளிப்புக்களை வழங்குவர். பல்கலைக்கழக தேர்வுக்கு பின், பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு மாணவருக்கும் உதவித்தொகை தரப்படும்.

கடந்த ஆண்டு, இப்பிரதேசத்திவ் 54 மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டனர். இக்குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் குவெய் இனத்தவர் உணர்ச்சிவசப்பட்டு கூறியதாவது:

"முன்பு, பல்கலைக்கழக மாணவர்கள் சிற்சிலரெ. இப்போது பலர் இருக்கின்றனர். எங்கள் மாடி கட்டிடத்தில் மட்டும் பலர் உள்ளனர். சிங் வாங் பல்கலைக்கழகம் பெய்சிங் பல்கலைக்கழகம் ஆகிய புகழ் பெற்ற பள்ளிகளிலும் பயில்கின்றனர். எனவே, இந்நிலை, முன்பு கண்டிராதது" என்றார்.

நியு சியே சாலை குடியிருப்பில் வாழ்வோரின் தனித்தன்மை காரணமாக சிறுவர்களை வளர்ப்பதும், குடியிருப்புப்பிரதேச நிர்வகிப்பவரின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். ஆண்டுதோறும், சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக பட்டதாரிகள், குடியிருப்புப் பிரதேசத்தின் நிர்வாக அணியில் சேர்க்கப்படுவர். தேசிய இனம், மதம் ஆகியவை தொடர்பான விவரங்களைக் கற்றுக்கொள்வது தவிர, இந்த இளைஞர்கள், குவெய் இன மக்களின் வீடுகளில் சென்று, கள ஆய்வு மேற்கொள்வதும் வழக்கமாகியுள்ளது"

வட மேற்கு சீனாவிலிருந்து குவெய் இன வாலிபர் Qiao Shi Min குடியிருப்புப் பிரதேசத்தில் பணிபுரிய அண்மையில் வந்தார். தனது பணி குறித்து கருத்து தெரிவித்ததாவது:

"எனது ஊரும், குவெய் இனத்தவர் கூடிவாழும் பிரதேசமாகும். தேசிய இன ஐக்கியத்துக்கு பங்காற்றுவது என்பது, எனது லட்சியமாகும். குவெய் இனத்துக்கும் ஹாங் இனத்துக்குமிடையே இணக்கமான உறவை இங்கு நான் ஆழ உணர்ந்து கொண்டுள்ளேன" என்றார் அவர்.

குவெய் இனத்தவர் தவிர, ஹாங், மஞ்சு உள்ளிட்ட பல இனத்தவர்கள் இங்கு வாழ்கின்றனர். மத நம்பிக்கை, வாழ்க்கை பழக்கம் ஆகியவை வேறுபட்டன என்ற போதிலும், அவர்கள் அனைவரும், ஒருவருக்கு ஒருவர் மதிப்பளிப்பர். இணக்கமாக வாழ்கின்றனர்.


1  2  3