• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-08 14:05:29    
பெய்சிங்கில் குவெய் இன குடியிருப்பு

cri

வாரத்தோறும் குடியிருப்பு பிரதேசத்தின் குவெய் இன ஊழியர் Zhang Lian Ci என்பவர், பள்ளிவாசலுக்குச் சென்று Yin Guo Fangஐப் பார்ப்பார். தொழுகை புரிய வந்த முஸ்லிம்களுடன் உரையாடுவார். குடியிருப்புப் பகுதியின் சூழல் பற்றிய அவர்களின் கருத்துக்களையும் வாழ்க்கைச் சிக்கலையும் விசாரித்து கேட்டுக்கொள்வார். அவர் திரட்டிய கருத்துக்களை உரிய நேரத்தில் குடியிருப்புப் பிரதேச நிர்வகிப்பவரிடம் தெரிவிப்பார். மிக குறுகிய காலத்துக்குள்ளே பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்காக அவர் இவ்வாறு செய்கின்றார்.

தொழுகை செய்வதற்கு முன்பு முஸ்லிம்கள் குளிப்பர். எனவே, நீர் பயன்பாடு அதிகம். குடியிருப்புப் பிரதேசத்தில் முஸ்லிம்களின் மத வாழ்க்கைக்கு வசதி அளிக்கும் வகையில், அங்குள்ள ஊழியர்கள் நகராட்சி வாரியத்துடன் தொடர்பு கொண்டு, நியு சியே சாலையில் பள்ளிவாசலுக்குத் தேவையான நீர் கிடைக்க உத்தரவாதம் செய்தனர். ஊழியர் Zhang Lian Ci கூறியதாவது:

"நீர் வழங்குவதில், அரசின் நீர் சேமிப்பு அலுவலகம், அதிக வசதி அளித்துள்ளது. மற்றவர்களை விட அவர்கள் கூடுதலாக நீரைப்பயன்படுத்தலாம். விலையும் குறைவு. சிறுபான்மை தேசிய இன மக்களுக்கு இது மதிப்பு அளிக்கின்றது. குறிப்பாக, முஸ்லிம் மக்களுக்கு வசதியாயிருக்கின்றது" என்றார்.

1  2  3