• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-13 22:04:00    
சீன தேசிய இன இயல் ஆய்வில் சாதனை

cri

சிறுபான்மை தேசிய இன மக்கள்

2008ம் ஆண்டு, சீனாவின் தலைநகரான பெய்சிங்கில் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டி நடைபெறவுள்ளது. சர்வதேச விளையாட்டு வீரர்கள் ஒன்றுபடும் ஒரு மாபெரும் விழா, இதுவாகும். அதே ஆண்டில், தேசிய இன இயல் பற்றிய உலக மாநாடும் நடைபெறும். உலகளாவிய, தேசிய இன இயல் துறையைச் சேர்ந்த மூத்த ஆய்வாளர்கள் இவ்வாண்டில் கலந்து கொள்வர். தேசிய இன நடையுடைபாவனைக்கு தனிச்சிறப்புள்ள சீனாவின் தென்மேற்கு பகுதியின் யுன்னான் மாநிலத்தின் கு மின் நகரில் இம்மாநாடு நடைபெறும். சீனாவின் தேசிய இன இயல் ஆய்வு, சர்வதேச கல்வியியல் துறையின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதைக் குறிக்கும் வகையில் இம்மாநாடு சீனாவில் நடத்தப்படுகிறது.

திபெத் இன மகளிர்

உலக தேசிய இனவியல் மாநாடு சர்வதேச மனிதகுல இயல் மற்றும் தேசிய இன இயல் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும், இது வரை அதன் 16 மாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. உலக தேசிய இனவியல், மனிதகுலவியல் ஆய்வுத்துறைகளில் மிக உயர்ந்த மாநாடு ஆகும். அதன் 13வது மாநாட்டின் போது, சீனா இதில் சேர்ந்தது. பின்பு, ஒவ்வொரு மாநாட்டிற்கும் சீனா அறிவாளர்களை அனுப்பி வைத்துள்ளது. இம்மாநாட்டில், சீன அறிவாளர்கள், கல்வியியல் பரிமாற்றத்தில் கலந்து கொண்டு, சீனாவின் தேசிய இனவியல் ஆய்வு பற்றி அறிமுகப்படுத்தியுள்ளனர். வெளிநாடுகளுடனான, சீன தேசிய இனவியல் வட்டாரத்தினரின் தொடர்பையும் சீன ஆய்வின் வளர்ச்சியையும் இது விரைவுபடுத்தியுள்ளது.

தேசிய இனவியல் ஆய்வு, சமூக அறிவியலின் முக்கிய பகுதியாகும். இது களஆய்விலும் தத்துவ ஆய்விலும் கவனம் தெலுத்துகிறது. நாட்டின் சமூக நிலையை உருவாக்குவதற்கு இது முக்கிய பங்கை ஆற்றுகின்றது. சீனாவின் தேசிய இனவியல் ஆய்வு, 19வது நூற்றாண்டின் இறுதியில் வெளிநாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வியல் சீனாவில் அறிமுகமான கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலான காலத்தில், சீன தேசிய இனவியல் ஆய்வாளர்கள், முக்கிய பயன் பெற்றிருக்கின்றனர். இது, சீனாவின் தேசிய இனவியல் ஆய்வுக்கு சிறந்த அடிப்படையிட்டுள்ளது. சீனக் கிராமப்புற சமூக ஆய்வு, சீன சிறுபான்மை தேசிய இன சமூக நிலை கள ஆய்வு ஆகியவை, அவர்கள் எட்டிய சமாதனைகளில் அடங்கும்.

1  2  3