• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-13 22:04:00    
சீன தேசிய இன இயல் ஆய்வில் சாதனை

cri

மங்கோலிய இன மக்கள்

"கடந்த சில ஆண்டுகளில் திபெத் தன்னாட்சிப் பிரதேச பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி நிலைமையின் தேவைக்கிணங்க, கிராமப்புற பொருளாதார ஆய்வகம், பொருளாதார நெடுநோக்கு ஆய்வகம் முதலியவற்றை அதிகரித்து திபெத் இனவியல் ஆய்வின் வரம்பை விரிவாக்கியுள்ளோம். திபெத் நவீனமயமாக்க வளர்ச்சி, லாசா நகரின் குடிபெயர்ந்த மக்கள் தொகை, திபெத் சிறு நகர் கட்டுமானம், உயிரின வாழ்க்கைச் சூழல் உருவாக்கம் உள்ளிட்ட ஆய்வு கனிகளை தந்துள்ளோம். உள்ளூர் அரசு, அறிவியல் முறையில் கொள்கையை தீர்மானிப்பதற்கு ஆதாரம் தந்துள்ளோம்" என்றார் அவர்.

திபெத் இனவியல் தவிர, சீனாவின் இதர 50க்கும் அதிகமான சிறுபான்மை தேசிய இனங்களும், சொந்த இனத்தின் சமூகம் வரலாறு மற்றும் பண்பாட்டை ஆராய்ந்துள்ளன. இதன் மூலம், இ இனவியல், மிவோங் இனவியல், இயோங் இனவியல், மங்கோலிய இனவியல் முதலியவை உருவாயிற்று. ஆண்டுதோறும் தேசிய இன மக்கள் குழுமிவாழும் பிரதேசங்களில் கல்வியியல் கருத்தரங்கு நடைபெறுகின்றது. உள்நாட்டு வெளிநாட்டு அறிவாளர்கள், தத்தம் இனத்து வரலாறு, பண்பாடு, சமூக வளர்ச்சி முதலிய பிரச்சினைகள் குறித்து ஆராய்வர். தேசிய இனப் பிரதேச வளர்ச்சிக்கு மதிப்புள்ள கருத்துக்களை அவர்கள் தெரிவித்துக்கொள்வர்.

சீன அரசு, தேசிய இனவியல் ஆய்விலும் வளர்ச்சியிலும் எப்போழுதும் கவனம் செலுத்தி வருகின்றது. தேசிய இனவியல் ஆய்வுக்கு இது சிறந்த வளர்ச்சி சூழ்நிலையையும் நிதியுதவியையும் வழங்குகின்றது. தற்போது, சீனாவில், பத்துக்கு மேலான பல்கலைக்கழகங்களில் தேசிய இனவியல் துறை நிறுவப்பட்டுள்ளது. தேசிய இனவியல் துறை, நாட்டின் முக்கிய சமூகவியல் துறைகளில் ஒன்றாகியுள்ளது. தவிரவும், தேசிய இனவியலாளர்கள் பலரும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், சிறுபான்மை தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள். சீனாவின் தேசிய இனவியல் ஆராய்ச்சியில் அவர்கள் சிறப்பு பங்கை ஆற்றுகின்றனர்.

சீனாவின் தேசிய இனவியல் ஆராய்ச்சியை, சர்வதேச தரமுடையதாக்கும் வகையில், தற்போது. சீனாவின் பல்வேறு முக்கிய பல்கலைக்கழகங்களும் கல்வியியல் அமைப்புகளும் ஆண்டுதோறும் தொடர்புடைய அந்நிய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வகங்களுடன் மேல்படிப்பு மாணவர்களையும் அறிவாளர்களையும் பரிமாறிக்கொள்கின்றன.


1  2  3