• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-13 22:04:00    
சீன தேசிய இன இயல் ஆய்வில் சாதனை

cri

மிவோங் இன மகளிர்

1949ம் ஆண்டு நவ சீனா நிறுவப்பட்ட பின், சீனாவின் தேசிய இனவியல் ஆய்வு பல வகைகளிலும் வளர்ச்சியடைந்துள்ளது.

சீன தேசிய இன வகைப்படுத்தல், சீன சிறுபான்மை தேசிய இன வரலாற்று கள ஆய்வு உள்ளிட்ட தேசிய இனவியல் ஆராய்ச்சியை இது நடத்தியுள்ளது. 56 தேசிய இனங்கள் இடம்பெறுகின்ற தற்போதைய சீனாவின் தேசிய இன அமைவு நிலையை உருவாக்குவதிலும், சீன தேசிய நிலைமைக்கு ஏற்ற தேசிய இன பிரதேச தன்னாட்சிக் கொள்கையை வகுக்க அரசுக்கு உதவிடுவதிலும் இச்சாதனைகள் வழிகாட்டியுள்ளன.

1980ம் ஆண்டுகளில், சீன தேசிய இனவியல் அறிவாளர்களின் ஆய்வுத் துறையும் மேலும் விரிவடைந்துள்ளது. சிறுபான்மை தேசிய இனத்து பாரம்பரிய பண்பாட்டின் மீது பொருளாதார வளர்ச்சியின் தாக்கம், சர்வதேச தேசிய இனங்களிடையே பரிமாற்றம் முதலியவற்றில் அதன் அழுத்தம் கிடைக்கிறது. மத்திய தேசிய இனவியல் பல்கலைக்கழக தேசிய இனவியல் துறையின் பேராசிரியர் சாங் ஹே இயங் இது குறித்து கூறியதாவது:

இயோங் இன மக்கள்

"சீன வரலாற்றையும் சிறுபான்மை தேசிய இன பாரம்பரிய பண்பாட்டையும் ஆராய்வதன் மூலம் புதிய பண்பாட்டை உருவாக்கி, நவீன சமூகத்தை கட்டியமைக்கின்றோம். அதே வேளையில், வெளிநாடுகளுடன் பரிமாற்றத்தை வலுப்படுத்த வேண்டும். சீனப்பொருளாதார வளர்ச்சிக்கு, அந்நிய தேசிய இனத்தின் பண்பாடு, மதம், சமூகம், மற்றும் சந்தையை அறிந்து கொள்வது தேவைப்படுகின்றது. தேசிய இனவியலாளர்கள் வெளிநாட்டில் இவற்றைப் பற்றி கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்" என்றார் அவர்.

அவர் அறிமுகப்படுத்தியுள்ள தேசிய இனவியல் ஆய்வுமுறை, சீனாவின் சிறுபான்மை தேசிய இனப்பிரதேசங்களில் பரவலாக நடைமுறைக்கு வந்துள்ளது. திபெத் இயல் ஆய்வு இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

திபெத் இன அறிஞர் சூ ஜிங் யே மே, திபெத் தன்னாட்சிப் பிரதேச சமூக அறிவியல் கழகத்தின் தலைவராவார். திபெத் இனவியல் திபெத் பிரதேச வளர்ச்சியுடன் இணைந்து ஆராய்ந்துள்ளதால், உள்ளூர் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு கொள்கை வரையறை செய்ய முடிந்துள்ளது என்றார் அவர்.

1  2  3