பெய்ஜிங் மாநகரின் வட கிழக்கு பகுதியிலுள்ள வாங் ஜிங் குடி இருப்பு பிரதேசத்தில், தென் கொரியர் பலர் வாழ்கின்றனர். ஆகவே, தென் கொரியாவில் தயாராகும் வணிகப் பொருட்களை விற்கும் கடைகள் பல அங்கு காணப்படுகின்றன. 36 வயதான 洪淳植 உணவுப் பொருள் விற்பனை கூட்டு நிறுவனம் ஒன்றை நடத்துகிறார். தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விற்பனையில் ஈடுபடுகிறார். அவரது கூட்டு நிறுவனம் அண்மையில் தான் தொடங்கப்பட்டது என்றாலும், வணிகம் விறுவிறுப்பாக வளர்ச்சியுற்று வருகிறது.
"தென் கொரியாவில் தயாராகும் உணவுப் பொருட்களை எங்கள் கூட்டு நிறுவனம் விற்பனை செய்கிறது. சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் இது உருவாக்கப்பட்டது. சீராக வளர்ச்சியுற்று வருகிறது. முன்பு ஒரு சிறு கடையாக, 30, 40 சுதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. தற்போது 5 கிளைகள் உருவாக்கப்பட்டுள்ளன. வாடகையாக பல பத்து ஆயிரம் யுவான் தருகிறோம்" என்றார் அவர்.
洪淳植விற்பனை செய்யும் உணவுப் பொருட்களின் விலை, தென் கொரியாவிலுள்ள கடையில் இருந்ததை விட அதிகமில்லை. எனவே பல தென் கொரியர்கள் அவரது கடைக்கு வந்து பொருட்களை வாங்க விரும்புகின்றனர். இப்போது, இங்கு வந்து பொருட்களை வாங்கும் சீனர்கள் அதிகரித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில், வணிகப் பொருட்களை இறக்குமதி செய்து சில்லறை விற்பனை செய்வதில் ஈடுபடும் சீனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொருளாதாரத்தின் உயர் வேக வளர்ச்சியுடன், சீன மக்களின் நுகர்வு நிலையும் உயர்ந்து வருகிறது. இறக்குமதி வணிகப் பொருட்களின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டின் முதல் 11 திங்களில், சீனாவின் மொத்த இறக்குமதி வர்த்தகத் தொகை 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. இது, 2003ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, சுமார் 40 விழுக்காடு கூடுதலாகும் என்பதை சீன வணிகத் துறை வெளியிட்ட புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
1 2 3
|