சீனாவின் ஏற்றுமதி பொருட்களின் மீது சில நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. எதிர்காலத்தில், இந்தச் செயல் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு பாதகமானது என்று யாவ் வென் பிங் அம்மையார் கருதுகிறார். தற்போது, உலகில் 3வது பெரிய இறக்குமதி நாடாக சீனா மாறியுள்ளது. சீனா வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, சீனாவின் இறக்குமதி அளவு, ஆசியாவின் மொத்த இறக்குமதி அளவில் ஐந்தில் ஒரு பகுதியாக உள்ளது. சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதில் பல நாடுகள் நலன் அடைந்துள்ளன என்று சீன சமூக அறிவியல் கழகத்தின் சாவ் ஜின் அம்மையார் கருதுகிறார். அவர் கூறியதாவது—
"உலகப் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் ஆற்றலாக சீனா மாறிவிட்டது என்பதை சர்வதேச அதிகார நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. சீனாவுக்கான ஜப்பானிய ஏற்றுமதி அதன் உள் நாட்டு பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது என்பது, கிழக்காசியப் பொருளாதார வளர்ச்சிக்கு, குறிப்பாக ஜப்பானிய பொருளாராத்தின் மறுமலர்ச்சிக்கு முக்கிய காரணமாகும் என்று ஜப்பானியரின் ஆராய்ச்சி முடிவு இதைக் காட்டுகிறது. தென் கொரிய பொருளாதார வளர்ச்சியில், சீன இறக்குமதி ஆற்றிய பங்கு 4 விழுக்காடாகும் என்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. அதாவது, இறக்குமதியின் விரிவாக்கம் சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பது மட்டுமல்ல, கிழக்காசிய பொருளாதார வளர்ச்சிக்கும் துணை புரியும்" என்றார் அவர்.
இவ்வாண்டு சீனாவின் நுகர்வு மற்றும் முதலீட்டு தேவை இன்னும் அதிகம். தவிர, உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த போது அளித்த வாக்குறுதியை சீனா செவ்வனே நிறைவேற்றி, காப்பு வரியை குறைத்து, காப்பு வரி அல்லாத தடைகளை நீக்கியுள்ளது. இதனால் சீனாவின் இறக்குமதி தொடர்ந்து உயர் வேகத்தில் அதிகரித்து வரும். 1 2 3
|