• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-16 17:05:30    
உயர் வேகத்தில் அதிகரிக்கும் இறக்குமதி வர்த்தகம்

cri

சீன சமூக அறிவியல் கழகத்தின் நிதி மற்றும் வர்த்தக பொருளாதார ஆய்வகத்தின் ஆய்வாளர் சாவ் ஜின் அம்மையார், சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டுக்கான ஆய்வு பணியில் நீண்டகாலமாக ஈடுபடுகிறார். எமது செய்தியாளருக்குப் பேட்டி அளித்த போது பேசிய அவர், 2004ஆம் ஆண்டில் சீனாவின் இறக்குமதி வர்த்தகம் உயர் வேகத்தில் அதிகரிப்பதை விரைவுபடுத்தும் காரணிகள் அதிகம் என்றார். அவர் கூறியதாவது—

"இறக்குமதி பெரிதும் அதிகரிப்பதற்கு, நுகர்வு தேவை, உள்நாட்டில் முதலீட்டு தேவை, சீனாவுக்கான அந்நிய முதலீடு ஆகியவை காரணமாகும். தவிர, சீனாவின் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை, இறக்குமதியின் அதிகரிப்பை விரைவுபடுத்துகிறது. உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த பின், சீனாவின் முதலீட்டு சூழ்நிலை மேலும் சீராக இருக்கிறது. காப்பு வரி குறைந்து வருகிறது. காப்பு வரி அல்லாத தடைகளும் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன" என்றார் அவர்.

சீன மக்களின் வாழ்க்கை நிலை உயர்வதுடன், இறக்குமதி பொருட்களும், குறிப்பாக, இறக்குமதியாகும் தகவல் தொழில் நுட்ப உற்பத்திப் பொருட்களும் சீன சந்தையில் நல்ல விற்பனையாகின்றன. நிலையான சொத்துக்களில் முதலீட்டு அதிகரிப்பு, எரியாற்றல், மூலப்பொருள், அரை உற்பத்திப் பொருள், இயந்திரம் முதலியவற்றின் வளர்ச்சியை விரைவுபடுத்தியுள்ளது என்று சாவ் சின் அம்மையார் எடுத்துக்கூறினார். தவிர, சீனாவுக்கான முதலீட்டை பன்னாட்டு கூட்டு நிறுவனம் விரிவாக்குவது என்பது, சீன இறக்குமதி வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாகும். அந்நிய முதலீட்டை ஈர்க்கும் அளவு அதிகரிப்பதுடன், இறக்குமதி வளர்ச்சியை மேம்படுத்துவதில் அந்நிய முதலீட்டின் பங்கும் நாளுக்கு நாள் கூடுதலாகும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

கடந்த ஆண்டில் இயந்திர மின் உற்பத்திப் பொருட்கள், இறக்குமதி பொருட்களில் சுமார் 50 விழுக்காடு ஆகும். கடந்த சில ஆண்டுகளில், இயந்திர மின் உற்பத்திப் பொருட்களின் இறக்குமதி பெரும் வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்து வருகிறது. கடந்த ஆண்டின் முதல் 10 திங்களில், அதன் இறக்குமதி தொகை 27 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. இது 2003ஆம் ஆண்டின் இதே கலாத்தில் இருந்ததை விட, 36 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று சீன இயந்திர மின் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதி வணிக சங்கத்தின் துணைத் தலைவர் யாவ் வென் பிங் அம்மையார் செய்தியாளரிடம் கூறினார். அவர் கூறியதாவது—

"கடந்த 5 ஆண்டுகளில், கருவிகள், உதிரிபாகங்கள் உள்ளிட்ட சாதாரண இயந்திர மின் உற்பத்தி பொருட்களை நாங்கள் ஏற்றுமதி செய்து வருகிறோம். தற்போது, பெரிய, கோவையான மற்றும் உயர் தொழில் நுட்ப உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம். இந்த புதிய உயர் தொழில் நுட்ப உற்பத்திப் பொருட்களின் 50 விழுக்காட்டு உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி இறக்குமதியை விரைவுபடுத்துகிறது" என்றார் அவர்.

1  2  3