• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-17 12:09:23    
ஒத்துழைப்புக்கான கூட்டாளி

cri
சீன அறிவியல் கழகம் சீன அரசாங்கத்தின் மிக பெரிய அறிவியல் ஆய்வு நிறுவனமாகும். அறிவியல் ஆய்வு துறையில் தொடர்ந்து புதுமையை படைக்கும் பொருட்டு அது கடந்த பல்லாண்டுகளாக உலகளவில் ஒத்துழைப்பு கூட்டாளிகளை நாடுவதற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றது. அது பரந்தளவில் சர்வதேச ஒத்துழைப்பிலும் ஊடுபடுகின்றது.

கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் இரண்டு ஆய்வு செயற்கை கோள்கள் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இவை பூமிக்கு பெரும் வாரியான தகவல்களை அனுப்பியுள்ளன. சீனா ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துழைக்கும் முதலாவது பொரிய ரக விண் வெளி ஒத்துழைப்பு திட்டமான இரட்டை நட்சத்திர விண் வெளித் திட்டம் செயல்படக் கூடிய ஒரு நிலையில் உள்ளதை இது காட்டுகின்றது.

சீன அறிவியல் கழகத்தின் உயர் தொழில் நுட்ப ஆய்வு மற்றும் வளர்ச்சி துறையின் துணைத் தலைவர் லியு பொ கூறியதாவது தற்போது சீனா செலுத்திய இவ்விரண்டு ஆய்வு செயற்கை கோல்களும் சீராக இயங்குகின்றன. இவை பூமிக்கு அனுப்பியுள்ள தகவல்கள் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டவை. சீன மற்றும் ஐரோப்பிய அறிவியல் அறிஞர்கள் இவற்றை ஆராய்வதன் மூலம் 70க்கும் அதிகமான ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர் என்றார் அவர்.

1  2  3