• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-17 12:09:23    
ஒத்துழைப்புக்கான கூட்டாளி

cri

மேலே கூறப்பட்ட இரட்டை நட்சத்திர விண்வெளித் திட்டத்தை சீன அறிவியல் கழகத்தின் அறிவியல் அறிஞர்கள் முதன் முதலாக முன்வைத்தனர். ரேகையிலும் துருவத்திற்கு மேலாகவும் செலுத்தப்பட்ட இரண்டு செய்றகை கோள்கள் பூமிப்பரப்பின் மீது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இத்திட்டம் முன்வைக்க்பப்டடதும் உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய விண் வெளி ஏஜின்சி இதற்கு உற்சாகமான வரவேற்பையும் ஆதரவையும் தெரிவித்துள்ளது. பிறகு அது சீன அரசு விண் வெளி அமைப்புடன் உடன்படிக்கை உருவாக்கியுள்ளது. இதனால் சீனா செலுத்திய இரண்டு ஆய்வு செயற்கை கோள்களும் ஐரோப்பிய விண் வெளி ஏஜின்சி செலுத்திய தொலை உணர்வு செயற்கை கோள்களும் பரஸ்பரம் ஒத்துழைத்து செயல்பட முடிந்தது.

நேயர்களே சற்று முன் கூறப்பட்ட இரட்டை நட்சத்திர விண்வெளித் திட்டமானது, சீன அறிவியல் கழகம் சர்வதேச ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.

இக்கழகத்தின் சர்வதேச ஒத்துழைப்பு துரையின் தலைவர் கொ குவா துஙக்ஷ் கூறியதாவது சீன அறிவியல் கழகமானது மிகப் பெரிய வளரும் நாட்டின் அரசு அறிவியல் கழகமாகும். உலக அறிவியல் முன்னணியை நோக்கிச் செல்லும் பாதையில் வளர்ச்சியடைந்த நாடுகள் மர்றும் சில வளரும் நாடுகளின் அறிவியல் ஆய்வு நிறுவனங்களிட கற்றுக் கொண்டு அவற்றுடன் பரிமாற்றத்தையும் மேற்கொள்ள வேண்டும். ஒத்துழைப்பு மூலம் தன் நிலைமை உயர்த்த வேண்டும் என்றார் அவர்.

தற்போது சீன அறிவியல் கழகம் 40க்கும் அதிகமான நாடுகளின் அறிவியல் ஆய்வு நிறுவனங்களுடனும் பல்கலைக்கழகங்களுடனும் நீண்டகால நிலையான சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்ற உடன்படிக்கைகளை உருவாக்கியுள்ளது. ஆய்வு நிறுவனங்களிடை பரிமாற்ற உடன்படிக்கைகளின் எண்ணிக்கை 600க்கும் அதிகமாகும்.

மாக்ஸ் பலாங்க் கழகமானது ஜெர்மனியின் மிகப் பெரிய அறிவியல் ஆய்வு நிறுவனமாகும். இது உலக அறிவியல் வட்டாரத்தில் பெரும் செல்வாக்கை பெற்றது. சீன அறிவியல் கழகம் இந்நிறுவனத்துடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒத்துழைத்து வருகின்றது. தற்போது ஆண்டு தோறும் சுமார் 200 சீன அறிவியல் ஆய்வாளர்கல் இந்நிறுவனத்தின் பல்வேறு ஆய்வகங்களில் நீண்டகால ஒத்துழைப்பு ஆராய்ச்சியை மேற்கொள்கின்றனர். அத்துடன் சில ஜெர்மன் அறிவியல் அறிஞர்களும் சீனாவில் ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர். இக்கழகத்தின் தலைவர் பிட்டர் கரூஸ் கூறியதாவுது நாங்கள் அருமையான தம்பதிகள் போல் இருக்கின்றோம். ஒத்துழைப்பில் இரு தரப்பினரும் வெற்றி பெற்றுள்ளோம். இவ்வுறவினால் எங்கள் கழகம் சொந்த நாட்டில் மட்டுமல்ல் வெளிநாடுகளிலும் வல்லுநர்களையும் ஆய்வு வளங்களையும் வளர்த்து விட்டோம். சீன அறிவியல் கழகத்தில் பயிற்றகப்பட்ட மேன்மேலும் அதிகமான இளம் அறிவியல் அறிஞர்களும் டாக்டர்களும் எங்கள் கழகத்தின் பல்வேறு ஆய்வகங்களில் பணி புரிகிறாராகள் என்றார் அவர்.

1  2  3