அரசு சாரா பொருளாதார வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்துவதை மையமாகக் கொண்ட கொள்கையை சீன அரசு அண்மையில் பிரகடனப்படுத்தியுள்ளது. இக்கொள்கையின் படி, சீனாவின் சட்டங்களும் விதிகளும் தடை விதிக்காத அனைத்து தொழில்களிலும் அரசு சாரா தொழில் நிறுவனங்கள் நுழையலாம். முன்னதாக அரசு சார் பொருளாதாரத்தின் ஏகபோகக் கட்டுப்பாட்டில் இருந்த மின் உற்பத்தி, தொலைத்தொடர்பு, இருப்புப்பாதை, பயணி விமான சேவை, பெற்றோலியம், நாணயம் உள்ளிட்ட துறைகளிலும் அரசு சாரா தொழில் தொடங்கலாம். இதற்கிடையில், பல்வகை பொதுப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளுக்கான முதலீடூ, கட்டுமானம், இயக்கம் ஆகியவற்றில் பங்கெடுக்குமாறு அரசு சாரா தொழில் நிறுவனங்களை இக்கொள்கை ஊக்குவித்துள்ளது. இக்கொள்கையை வெளியிடுவது, சீனாவின் அரசு சாரா பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது என்று தொடர்புடையவர் கருதுகின்றனர்.
அரசு சாரா பொருளாதாரம் சந்தையில் நுழைவதற்கான கட்டுப்பாட்டை தளர்த்துவது, இக்கொள்கையின் மிக பெரிய தனிச்சிறப்பியல்பாகும். அரசு சாரா பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பலவகை நடவடிக்கைகளை இக்கொள்கை முன்வைத்துள்ளது என்று சீனாவின் புகழ் பெற்ற பொருளியலாளர் Cheng Si Wei தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"முன்னதாக, அரசு சாரா பொருளாதாரத்துக்கு பாரபட்சமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசு சாரா தொழில் நிறுவனங்கள், ஏகப்போக தொழில்களில் நுழைய அனுமதிப்பது, இக்கொள்கையின் மிக பெரிய தனிச்சிறப்பியல்பாகும் என்று நான் கருதுகின்றேன். அன்னிய முதலீட்டு தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் அனைத்து துறைகளிலும் அவை நுழைவதற்கு அனுமதி அளிப்பது ஆகியவை அடங்கும்." என்றார் அவர்.
1 2 3
|