1970ஆம் ஆண்டுகளின் இறுதி முதல், சீனாவில் அரசு சாரா பொருளாதாரம் வளர்ச்சியுற்று வருகின்றது. 20க்கு அதிகமான ஆண்டுகளின் வளர்ச்சி மூலம், தற்போது அரசு சாரா பொருளாதாரம், சீனாவில் சந்தை பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. புள்ளி விவரங்களின் படி, தற்போது சீனாவில் சுமார் 40 லட்சம் தனியார் தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. பதிவு செய்யப்படும் முதலீடு 4 லட்சம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. இவற்றில், பதிவு செய்யப்படும் முதலீடு 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட 50 மடங்குக்கும் அதிகமாகும். தவிர, சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பில் அரசு சாரா பொருளாதாரத்தின் விகிதாசாரம், 27 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விழுக்காட்டுக்கு குறைவாக இருந்ததில் இருந்து, தற்போதைய மூன்றில் ஒரு பகுதியாக உயர்த்தப்படும்.
சீனாவின் அரசு சாரா பொருளாதாரத்தின் வளர்ச்சி, நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களின் பொருளாதாரத்தை வளப்படுத்தி, நிதி வருமானத்தை அதிகரித்து, சமூகத்தில் அதிகமாக வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இது மட்டுமல்ல, சீனச் சந்தை பொருளாதாரத்தின் உயிராற்றலையும் இது உயர்த்தியுள்ளது என்று Cheng Si Wei கருதுகின்றார். அவர் கூறியதாவது:
"நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் உயிராற்றலையும், சந்தை பொருளாதாரத்தின் உயிராற்றலையும் உயர்த்துவது என்பது, அரசு சாரா பொருளாதார வளர்ச்சி ஆற்றியுள்ள மிக பெரிய பங்காகும். சந்தையில் மூலவளத்தை மேலும் செவ்வனே ஒதுக்கீடு செய்து, போட்டியை விரைவுபடுத்தி, ஏகபோகத்தை நீக்க இது துணை புரியும். இதற்கிடையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், நுகர்வோருக்கும் இது நன்மை பயக்கும்." என்றார் அவர்.
ஆனால், தற்போது சீனாவில், அரசு சாரா பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சில பிரச்சினைகள் நிலவுகின்றன. சில பிரதேசங்களிலும், சில வாரியங்களிலும், மக்களின் கருத்து மாற்றம் பின்தங்கிய நிலையில் உள்ளது. தொடர்புடைய சட்டங்களும் விதிகளும் முழுமையாக இல்லை. சீன அரசு வெளியிட்ட அரசு சாரா பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கை, இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சிறந்த கொள்கை சூழலை வழங்கும். எடுத்துக்காட்டாக, அரசு சாரா தொழில் நிறுவனங்கள், நிதித் துறையில் நுழைவதற்கு அனுமதி அளிப்பது, அவற்றின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு துணை புரியும்.
1 2 3
|