இனிமேல், நாட்டின் நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி நிதி ஏற்படுத்தப்படுவதை சீனா விரைவுபடுத்தி, அரசு சாரா தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குதலை அதிகரிக்கும். இதற்கிடையில், அரசு சாரா பொருளாதாரத்தின் நேரடி வழிகளை சீனா விரிவாக்கும். தவிர, அரசு சாரா தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு நிதி மற்றும் வரி வசூல் ஆதரவை சீன அரசு வழங்கும்.
அரசு சாரா பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த, சீன அரசு வெளியிட்ட கொள்கையும், நடவடிக்கைகளும், அரசு சாரா தொழில் நிறுவனங்களால் வரவேற்கப்பட்டுள்ளன. சீன Xin Ao குழுமம், நகர் எரிவாயு தொழில் நடத்தும் தனியார் தொழில் நிறுவனமாகும். அது நிறுவப்பட்ட 10க்கு அதிகமான ஆண்டுகளில், 500 கோடி யுவான் சொத்துடன், 8 ஆயிரம் பணியாளர்களை கொண்ட பெரிய குழுமமாக இத்தொழில் நிறுவனம் வளர்ச்சியுற்று வருகின்றது. நாட்டின் கொள்கையினால், அரசு சாரா தொழில் நிறுவனங்கள் தெரிவு செய்து, முதலீடு செய்யும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இக்குழுமத்தின் இயக்குநர்கள் குழுத் தலைவர் Wang Yu Suo செய்தியாளரிடம் கூறியதாவது:
"தனியார் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியுற்று வரும் வெவ்வேறான கட்டத்தையும் அரசின் கண்காணிப்பு உள்ளிட்ட வெவ்வேறான கோரிக்கையையும் இக்கொள்கை தெளிவாக விளக்கம் அளித்துள்ளது. இக்கொள்கையை வெளியிடுவது காலத்துக்கு ஏற்றது." என்றார் அவர்.
இக்கொள்கையை சீன அரசு வெளியிட்ட பின், தொடர்புடைய அரசாங்க வாரியமும், உள்ளூர் அரசாங்கங்களும், இதற்கு இசைவான தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிகின்றது. சீனாவில் அரசு சாரா பொருளாதாரம் தொடர்ந்து விரைவாக வளர்ச்சியுற்று வருவதற்கு இவை துணை புரியும். அரசு சாரா பொருளாதாரம் சீனப் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் முக்கிய ஆற்றலாக மாறும் என்று தொடர்புடையவர் கருதுகின்றனர்.
நேயர்கள், இது வரை "அரசு சாரா பொருளாதாரத்தின் வளர்ச்சி" பற்றி கேட்டீர்கள். இத்துடன், மக்கள் சீனம் நிகழ்ச்சி நிறைவடைகிறது. 1 2 3
|