• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-16 12:29:10    
தெற்கு சீனாவில் போ ஓ நகரம்

cri

தெற்கு சீனாவின் ஹெய்னான் மாநிலத்தின் சியுங்காய் நகரில் போ ஓ அமைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் அது, அவ்வளவாக அறிமுகமாகாத கடற்கரை நகராக இருந்தது. ஆனால், 2001ல் ஆசிய கருத்தரங்கு இந்நகரில் நடைபெற்றதால் போ ஓ என்னும் பெயர், ஆசிய கருத்தரங்குடன் இணைந்திருக்கின்றது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டின் வசந்த காலத்திலும் ஆசிய கருத்தரங்கின் ஆண்டு கூட்டம் இந்நகரில் நடைபெறத் துவங்கியது. சீன நிலப்படத்தில் குறிப்பு இல்லாத இச்சிறிய மீன் பிடி கிராமம் அப்பொழுது முதல் சீனாவின் பிரபல சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, பளிங்கு போன்ற வன்சியென் ஆற்று நீர் என்னும் பாடலாகும். இப்பாடல், அனைத்து சீன மக்களுக்கும் தெரியும். வன்சியென் ஆறு, எழில் மிக்க ஆறு. பாய்ந்து ஓடும் வன்சியென் ஆறு அமைதியாகத் தெற்கு சீனக் கடலில் கலக்கின்றது. போ ஓ நகரம், வன்சியென் ஆற்றின் கழிமுகத்தில் அமைந்துள்ளது. வன்சியென் ஆற்றுப்பகுதியில் சீனாவில் வெப்ப மண்டல உயிரின வாழ்க்கைச் சூழல் மிகவும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது சீனாவின் அமேசான் ஆறு என்று அழைக்கப்படுகின்றது. ஆற்றின் இரு கரைகளிலும் செடிகொடி மரங்கள் மண்டிக்கிடக் கின்றன. ஆற்றங்கரையில் அமைந்த போ ஓ நகரம், பச்சைப் பசேலென்ற மரங்களால் சூழப்பட்டுள்ளது.

      
அது உலகில் மிக அருமையான கழிமுகம் என்று இங்கு வருகை தந்த ஐ.நாவின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிபுணர்கள் போற்றியுள்ளனர். மாசற்ற வன்சியென் ஆற்று நீரினால், இயற்கை காட்சி அழகுற விளங்குகிறது. வன்சியென் ஆற்றின் கழிமுகத்தில் மணல் திட்டு ஒன்று உள்ளது. இந்த மணல் திட்டு, ஆஸ்திரேலியாவின் தங்கக் கடற்கரை போல் காட்சியளிக்கின்றது.
ஆஸ்திரேலியாவின் தங்கக் கடற்கரைக்குச் சென்று வந்த செல்வி சௌமின் கூறியதாவது, இந்த மணல் திட்டு மிகவும் அழகானது. அது தென் சீனக் கடலையும் வன்சியென் ஆற்றையும் பிரிக்கின்றது. அதன் மேலே நடந்துசெல்லும் போது நல்லாயிருக்கிறது. இங்குள்ள மணல் திட்டு, ஆஸ்திரேலியாவின் தங்கக் கடற்கரை போல இருக்கின்றது என்றார் அவர்.
1  2  3