.

அவர்களுடைய நுட்பமான சமையல் திறமையைக் கண்டும், உணவு வகைகளின் நறுமணத்தை நுகர்ந்தும் பயணிகள் உண்ண விரும்புகின்றனர். அவர்கள் போ ஓ நகரின் இரவு காட்சியைக் கண்டுகளிப்பதோடு, அங்குள்ள சுவையான உணவு வகைகளையும் சுவைத்து உண்ணலாம். உணவு விற்பனை நள்ளிரவு வரை நீடிக்கிறது. பயணி வாங்சியோநாங் கூறியதாவது, இங்கு விற்கப்படும் உணவு வகைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். போ ஓவிலுள்ள மிகவும் சுவையான உணவு வகைகளை இங்கு சுவைத்து உண்ணலாம். பல்வகை மீன், இறால், நண்டு முதலியவை இங்கு விற்பனையாகின்றன. மிகவும் ருசியான உண்மையான ஹைநான் கோழி சோறும் சாப்பிடலாம் என்றார் அவர். இந்நிகழ்ச்சி மூலம் போ ஓ நகரத்தை நீங்கள் மேலும் அறிந்திருப்பீர்கள் என நான் நம்புகின்றேன். இதற்கு முன் இந்நகரம் பற்றி எங்கள் செய்தி மற்றும் செய்தித்தொகுப்பு அல்லது வேறு வழிகளில் நீங்கள் ஓரளவு அறிந்திருக்கலாம். 1 2 3
|