
இந்த மணல் திட்டிலிருந்து அவ்வளவு தூரம் இல்லாத பெரும் கடலில் கற்பாறை கூட்டம் ஒன்று உள்ளது. அவை, செங்குத்தான மலை போல, கம்பீரமாக நிற்கின்றன. இது தான் புகழ்பெற்ற சன்கொன் கற்சிலை. இக்கற்சிலை, மீனவர்களின் கடவுள் ஆகும். மீன் பிடிக்கப்போகும் போது, மக்கள் வழிபாடு செய்வது வழக்கம். போ ஓவின் நீர், மணல் திட்டு ஆகியவை பற்றி குறிப்படும் போது, அதன் தீவு பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. உண்மையிலே, போ ஓ என்னும் பெயருக்கும், துங்யு என்னும் தீவுக்கும் தொடர்பு உண்டு. துங்யு தீவுக் கரையோரத்தில் காட்டு அன்னாசிப் பழ மரங்கள் எங்கெங்கும் காணப்படுகின்றன. தென்னை, கமுகு முதலிய வெப்பமண்டல மரங்கள் வளர்கின்றன.

இத்தீவின் பரப்பளவு அவ்வளவு பெரியதில்லை. அதைச் சுற்றிப் பார்க்கச் சுமார் ஒரு மணி நேரம் செலவழித்தால் போதும். முழு தீவிலும் மொத்தம் 160க்கும் அதிகமான குடும்பங்களே உள்ளன. அவர்கள், வன்சியென் ஆற்றைத் தாய் ஆறு என கூறுகின்றனர்.துங்யு தீவைச் சிறந்த விளைநிலமாகக் கருதுகின்றனர். அங்கு, மக்கள் தலைமுறை தலைமுறையாக அமைதியாக வாழ்கின்றனர். விவசாயிகள் பயிர்த் தொழிலில் ஈடுபடுகின்றனர். வாத்து மற்றும் வாத்துக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. கடற்கரையில் அமைந்துள்ள பல சிறிய நகரங்கள் போல, போ ஓ நகரம் அமைதியான நகரமாகும். இருப்பினும், இன்றைய போ ஓ நகரம், விரைவாக வளர்ச்சியடைந்து, உலகளாவிய சுற்றுலாக் காட்சித் தலமாக மாறியுள்ளது. வசதியான ஹோட்டல், விடுமுறை விடுதி, விசாலமான கோல்பு மைதானம், தனிச்சிறப்பு வாய்ந்த ஆசிய கருத்தரங்கு மையம் ஆகியவையும் பெரும் கடல், தென்னை மரம், மணல் கரை, தொன்மை வாய்ந்த மக்கள் வீடு ஆகியவற்றுடன் இணைந்து அழகாகக் காட்சியளிக்கின்றன. இரவில் போ ஓ நகரில் வீதியில் விளக்கு போடப்பட்ட பின், மென்மையான விளக்கு ஒளியும் தூய்மையான காற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி தருகின்றன. அப்பொழுது உணவு விற்பனையாளர்கள், வெளியில் சென்று, உணவு வகைகளை விற்பனை செய்கின்றனர்
1 2 3
|