• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-03 19:53:34    
Dabancheng இளம் பெண் மொச்சை

cri

Dabancheng

மேற்கு சீனாவின் சிங்கியாங் விகுர் இன தன்னாட்சிப் பிரதேசத்தில் Dabancheng எனும் இடம் உண்டு. அது, பண்டைக் கால பட்டுப்பாதையில் பிரபலமான பேருராக இருந்தது. 60 ஆண்டுகளுக்கு முன் Dabancheng இளம் பெண் என்ற பாடலால் இவ்விடம் நாடு முழுவதும் புகழ்பெற்றது. Dabancheng இல் அழகிகள் பலர் இருப்பதை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர். இங்கு வசிக்கும் விவசாயி Er Bu Jiang அதே காரணத்தினால் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கும் Dabancheng இளம் பெணுக்குமிடையில் எப்படிப்பட்ட கதை பரவுகின்றது?

Dabancheng என்பது, நகரென கூறப்படுகின்றது. ஆனால், உண்மையில் அது ஒரு சிறிய நகராகும். தலைநகரான உருமுச்சியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றது. இச்சிறு நகரில் வீதிகளில் Dabancheng இளம் பெண் மொச்சை என்ற பெயருடைய கடை காணப்படுகின்றது. கடையின் உரிமையாளர் Er Bu Jiang உற்சாகமாக வாங்குவோரை ஈர்க்க சத்தமிட்டு அழைக்கின்றார். வறுத்த மொச்சை, எண்ணெயில் பொரித்த மொச்சை, உப்புநீரில் வைத்து தயாரிக்கப்பட்ட மொச்சை என்றேல்லாம் இக்கடையில் உள்ளன. இக்கடையில் பத்துக்கும் அதிகமான இத்தகைய மொச்சைகள் விற்கப்படுவதால், Dabancheng இளம் பெண்கள் எனும் விகுர் இன பாடல் இசை இக்கடையில் கேட்கப்பட்டு வருகின்றது. பாட்டோலியுடன் மக்கள், தாம் விரும்பிய மொச்சைகளைத் தேர்ந்தெடுத்து வாங்குகின்றனர்.

Dabancheng

மொச்சை, இங்குள்ள சுதேச பொருளாகும். தனித்தன்மை வாய்ந்த நீர் மற்றும் மண் காரணமாக, இச்சிறு நகரில் விளையும் மொச்சை, பெரியதாகவும் ருசியாகவும் உள்ளது. இம்மொச்சை தரமானது. மலை அருகில் வாழ்வோர் மலையைச் சார்ந்து வாழ்வர். ஆறு அருகில் வாழ்வோர் ஆற்றைச் சார்ந்து வாழ்வர் என்ற சீன பழமொழி போல் Dabancheng சிறு நகரில் வாழும் Er Bu Jiang குடும்பத்தினர்கள், தலைமுறை தலைமுறையாக மொச்சை பயிரிட்டு, விற்று வாழ்கின்றனர். Er Bu Jiangஇன் நினைவில், தம் சிறு வயதிலிருந்தே தாயுடன் சேர்ந்து, பாதையோரத்தில் அங்காடி நிறுவி, வறுத்த மொச்சை விற்பதன் மூலம் வாழ்க்கை நடத்தி வருகிறார். அப்போதைய Dabancheng சிறு நகரத்தில் எங்கும் மொச்சை விற்பனை அங்காடிகள் நிறைய காணப்பட்டன. வாடிக்கையாரர்களை ஈர்க்க வியாபாரிகள் சத்தமிட்டு வருகின்றனர். இந்த வழியாகச் செல்வோர் அவ்வப்போது நின்று மொச்சை வாங்குகின்றனர்.

விகுர் இன மக்கள், வியாபாரம் செய்ய விரும்புகின்றனர். Er Bu Jiangவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. வயதானவராகிய பின், அவர் நாள்தோறும் இரவும் பகலும் பாதையோரத்தில் அங்காடி நிறுவி மொச்சை விற்றுள்ளார். Dabancheng சிறு நகரம், பிரபலமான "காற்று நகரம்". அப்போது பாதையோரத்தில் அங்காடியில் மொச்சை விற்பனை செய்யும் Er Bu Jiang மிகவும் பாதிக்கப்பட்டு வந்தார். பெரிய காற்று வீசும் போதெல்லாம். அவரது வாகனம் அடிக்கடி தரையில் விழுந்து, மொச்சை தரையில் சிதறி பரவின.

1  2  3