• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-03 19:53:34    
Dabancheng இளம் பெண் மொச்சை

cri

2001ம் ஆண்டு செப்டம்பர் திங்கள், புதிய செய்முறையில் பதனிடப்பட்ட மொச்சையை, சர்வதேச ரீதியான பொருளாதார வர்த்தக விழாவான உருமுச்சி பொருளாதார வர்த்தக பேச்சுவார்த்தைக்கு அவர் கொண்டு வந்தார்.

எதிர்பாராதவாறு, இம்முறை, Er Bu Jiangஇன் Dabancheng இளம் பெண் மொச்சை, விரைவாக விற்பனையாயிற்று. சில அயல் நாட்டு வணிகர்கள் Er Bu Jiang உடன் உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். "இளம் பெண் மொச்சை" என, அயல் வணிகர்கள் பலர் பெயரை வழங்கினர். இது முதல், Er Bu Jiangயின் "Dabancheng இளம் பெண் மொச்சை" என்ற வணிக உரிமம் உடைய மொச்சை, உருமுச்சியின் பல்வேறு பெரும் பேரங்காடிகளில் இடம்பெற்றுள்ளது. Er Bu Jiang வெற்றி பெற்றார். வளமடைந்த பின், Er Bu Jiang மேலும் அதிகமானவற்றை கருத்தில் கொள்கிறார். அவர் கூறியதாவது:

எனது தொழிற்சாலை, அளவில் மேன்மேலும் பெரிதாகி வருகின்றது. எனது உற்பத்திப் பொருள், தேவைக்குப் பற்றாக்குறையாக இருக்கும் போது, நான் தரமான மொச்சையைத் தேர்நதெடுத்து பதனிடுகின்றேன். அன்றி, சில விவசாயிகளுடன் உடன்பாட்டுக்கு வந்து, குளிர்கால ஓய்வு நேரத்தில் தத்தமது வீடுகளில் விளையும் மொச்சையை பதனிட்டு, மேலும் பதனீடு செய்வதற்காக, என்னிடம் அவற்றை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டேன்" என்றார்.

தற்போது, Dabanchengஇல் ஐயாயிரம் சதுர மீட்டர் நிலப்பரப்புடையஸ ஆண்டுக்கு இரண்டாயிரம் டன் மொச்சையைப் பதனிட வல்ல ஆலை ஒன்றை அவர் கட்டினார். மொச்சைப் போலவே, இச்சிறு நகரிலுள்ள இதர வாசிகளும், மொச்சையைச் சார்ந்து அயராது உழைத்து, தமது அருமையான ஊரை கட்டியமைக்கின்றனர். Er Bu Jiangயின் சக ஊர்வாசியான, 63 வயதான விகுர் இன முதியவர் Zu Nu Er கூறியதாவது:

இச்சில ஆண்டுகளில், Dabanchengஇல் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பு நாங்கள் மணால் ஆன வீட்டில் வசித்தோம். இப்போது செங்கல் வீட்டில் வாழ்கின்றோம். முன்பு தானிய பற்றாக்குறை இருந்தது. இப்போது பல குடும்பங்களில் கார்களும் இருக்கின்றன. சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டுள்ளது" என்றார் அவர்.


1  2  3