• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-03 19:53:34    
Dabancheng இளம் பெண் மொச்சை

cri

\

Dabancheng இளம் பெண்

கடந்த சில ஆண்டுகளில், உள்ளூர் அரசாங்கத்தின் முதலீட்டுடன் மொச்சை வாங்குவதற்காகவும் விற்பதற்காகவுமான சந்தை கட்டப்பட்டுள்ளது. அப்போது முதல் பாதையோரத்தில் அங்காடியை நிறுவத் தேவையில்லாமல் போனது. வியாபாரத்தில் தேர்ச்சி பெற்ற Er Bu Jiang, சில ஆண்டுகள் மட்டும் தம் குடும்ப வாழ்க்கையை வளமாக்கினார். ஆனால் 6 ஆண்டுகளுக்கு முன், லாசா உருமுச்சியில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார வர்த்தக பேச்சுவார்த்தையில், Er Bu Jiangவுக்குப் புதிய எண்ணம் தோன்றியது.

"பேச்சுவார்த்தையில் Dabancheng மொச்சைக்கு வணிக உரிமம் இல்லை. ஏனைய பொருட்கள் அனைத்துக்கும் வணிக உரிமம் உண்டு. "உறைபனி மலை" என்ற வணிக உரிமம் பதிவு செய்யலாம் என, எனது நண்பர்கள் பலர் யோசனை கூறினர். 2000ம் ஆண்டு, எனது குடும்பத்தின் மொச்சைக்கு இந்த வணிக உரிமம் பதிவு செய்துள்ளேன்" என்றார் அவர்.

அப்போது முதல், முதலில், Dabancheng சிறு நகரத்தில் மொச்சை பதனீட்டு ஆலை ஒன்றை நடத்தினார். உருமுச்சியில் அவர் கடை ஒன்றை துவக்கினார். ஆனால், உறைபனி மொச்சையின் விற்பனை, Er Bu Jiang இன் எதிர்ப்பார்த்தது போல் நல்லதாயில்லை. எனவே, அவர் தோல்வியின் படிப்பினையை கற்றார். ஒன்று. மொச்சைப் பதனிடும் அறிவியல் தொழில் நுட்பம் அதிகமில்லை. இரண்டு. சிப்பம் தரமானதல்ல. பார்ப்பதற்கு அவ்வளவு சிறந்ததல்ல.

இந்நிலையில், அவர் தற்காலிகமாக வியாபாரம் செய்யாமல், மற்றவரிடம் கறறுக்கொள்ளத் துவங்கினார். மொச்சை பதனீட்டுக்கான சிறந்த முறையை அவர் கற்றுத் தேர்ந்தார். பின்னர், முன்னாள் பதனீட்டு ஆலையை தொழில்னுட்பத்தில் சீரமைக்கத் துவங்கினார்.

ஒரு நாள், மொச்சை பதனீட்டு ஆலையில் வேலை செய்கையில், ஜன்னல் மூலம் "Dabancheng இளம் பெண்" என்ற பழைய பாடல் கேட்டது. அப்போது தமது மொச்சைக்கு இப்பாடலை, பெயராக்க வேண்டும் என நினைத்தார்.

1  2  3