• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-14 17:20:36    
சீன பொறியியல் கழக உறுப்பினர் Duoji

cri

அறிவியல் நிபுணர் Duoji

2001ம் ஆண்டு, திபெத் இன அறிவியல் நிபுணர் Duoji, சீனப் பொறியியல் கழக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திபெத்தின் முதலாவது கழக உறுப்பினர் என்ற பெருமை அவரை சாரும். திபெத்தின் ஒதுக்குப்புற மலை கிராமத்தில் விவசாயி குடும்பத்தில் பிறந்த அவர், கடந்த நூற்றாண்டின் 70ம் ஆண்டுகளில் தமது 20 வயதில் கிராமத்தை விட்டு தென்மேற்கு சீனாவின் Chengdu நகரில் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில துவக்கினார். நிலவியல் ஆய்வுத்துறையை தமது சிறப்புப் பாடமாகத் தேர்நதெடுத்தார்.

அவ்வளவாக வரவேற்கப்படாத, படிப்பதற்கு கடினமான நிலவியல் துறையைத் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம் என்ன என்பது பற்றிக் குறிப்பிடுகையில், அவர் கூறியதாவது:

"நான் சிறு வயதிலிருந்தே நிலவியல் ஆய்வு பற்றிய அறிவைக் கற்றுக் கொள்ள விரும்பினேன். ஏனெனில், பலர் திபெத்துக்குச் சென்று, நிலவியல் ஆய்வில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மிகுந்த அக்கறையுடன் பணி புரிகின்றனர். இது சுவைமிக்க பணி என நான் நினைத்தேன்" என்றார்.

Duoji, அவ்வளவு உயரமானவர் அல்ல. கறுப்பு நிறமான அவரது முகத்தில் எப்பொழுதும் சிலிப்பு காணப்படுகின்றது. நான்கு ஆண்டுகால பல்கலைக்கழக வாழ்க்கை, மகிழ்ச்சிகரமானது. நிலவியல் ஆய்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட தொடர்புடைய அறிவுகள் பலவற்றை கற்றுக்கொண்டதாகவும், நிலவியல் ஆய்வு பணியில் ஈடுபடுவதற்கு அவை உறுதியான அடிப்படை இட்டுள்ளதாகவும் Duoji தெரிவித்தார்.

மிக அதிக மதிப்பெணுடன் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டதாரியாகி, தம் ஊருக்குத் திரும்பி, தம் விருப்பப்படி நிலவியல் பணி புரிய தொடங்கினார். அப்போதைய திபெத்தில், கடும் எரியாற்றல் பற்றாக்குறை நிலவியது. அங்கு முக்கியமாக பூமியின் வெப்பத்தால் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. அவர் நில வெப்ப துறையில் சேர்ந்து, விரைவில் தொழில் நுட்பத்துக்குப் பொறுப்புள்ளவர் என்ற தகுநிலையில், நில வெப்பம் பற்றிய நிலவியல் ஆய்வில் ஈடுபட்டு குழுவுக்குத் தலைமை தாங்கி, சிறந்த சாதனைகளைப் புரிந்துள்ளார்.

அவருடைய சிறந்த பணி காரணமாக, பல கல்வி வாய்ப்புகளை Duoji பெற்றார். புணி புரியத் துவங்கியதற்குச் சற்றுப்பின்னர், பெய்சிங்கில் அந்நிய மொழியைக் கற்றுக்கொண்டார். ஓராண்டுக்குப்பின் மேல்படிப்புக்காக, இத்தாலி, அமெரிக்கா முதலிய நாடுகளுக்குப் போய், நிலவியல் ஆய்வு பற்றிய தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொண்டார்.

1  2  3