• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-14 17:20:36    
சீன பொறியியல் கழக உறுப்பினர் Duoji

cri

Yang Ba Jing  

வெளிநாடுகளில் பல்வகைகளில் அறிவைக் கற்றுத் தேர்ந்ததினால், Duoji உற்சாகமடைந்தார். ஊர் திரும்பியதும், நிலவியல் ஆய்வுப் பணியில் அவர் முழு மனதுடன் ஈடுபட்டார். கடந்த 90ம் ஆண்டுகளில், திபெத்தின் லாசா நகரில் Dang Xiong மாவட்டத்தில் அமைந்துள்ள Yang Ba Jing நில வெப்பம் சேமிப்பு அளவு பற்றி உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்கள் விவாதம் நடத்தத் துவங்கினர். அங்கு ஆழமான கிணறுகளை தோண்ட முடியாது என, பெரும்பாலான நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், அவர்களின் கருத்துக்கு தமது எதிர் கருத்தினை தெரிவித்து, Yang Ba Jingஇல் அகழக்கூடிய உயர் வெப்ப திராவப் பொருள் உள்ளது. அன்றி, அதிகமான படிவு இருக்கின்றது. ஆழமான கிணறுகளைத் தோண்ட முடியும் என்று Duoji கூறினார். அவரது கருத்து சரி என்பது நடைமுறையில் நிரூபிக்கப்பட்டது. அவர் தலைமையில், Yang Ba Jing நில வெப்ப வள ஆய்வு பணியில் முக்கிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. தற்போது, Yang Ba Jing உயர் வெப்ப ஆழ் கிணறு, சீனாவில், வெப்பம் மிக அதிகமான, திராவப் பொருள் அளவு மிக அதிகமான, தோண்ட வல்ல நில வெப்ப கிணறாக மாறியுள்ளது.

திபெத் தன்னாட்சிப் பிரதேசத்து நிலவியல் கனிமப் பொருள் ஆய்வுத் துறைத் தலைவர் Cirenda, திபெத்தில் மூத்த நிலவியல் நிபுணராவார்.

Yang Ba Jing

Duojiஉடன் பல்லாண்டுகளாக பணிபுரிந்திருக்கின்றார். Duoji பற்றிக் குறிப்பிட்ட போது, Duoji கடினமான நிலையிலும் பணிபுரியக்கூடியவர். தாம் செய்ய நினைப்பதை அவர் கட்டாயம் செய்து விடுவார் என்று அவர் கூறினார். இதோ அவர் ஒரு கதை சொன்னார். 1998ம் ஆண்டு, குளிர்காலத்தில், கனிமப் பொருளைக் கண்டறிய, Duoji திபெத்தின் அலி பிரதேசத்துக்குச் சென்றார். உலகிலேயே மிக உயரமான இவ்விடத்தில் குளிர்காலத்தில் கடும் குளிரில் வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை நினைத்துப்பார்க்கலாம். ஆனால், அங்கு Duoji பெரிய தங்கச்சுரங்கத்தை கண்டுபிடித்தார். Cirenda கூறியதாவது:

"இத்தகைய நிலைமையில் பணிபுரிவது, எவ்வளவு கடினம் என்பதை அப்போது Duojiவுக்கும் தெரியும் என்பது உண்மையே. ஆனால், அவர் பணியில் உறுதியாக நின்று, பத்து டன்னுக்கும் அதிகமான பெரிய ரக தங்கச்சுரங்கத்தைக் கண்டுபிடித்தார். இது வரை திபெத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, அளவில் மிகப் பெரிய தங்கச் சுரங்கம், இது ஆகும்" என்றார் அவர்.

1  2  3