• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-14 17:20:36    
சீன பொறியியல் கழக உறுப்பினர் Duoji

cri

Duojiவுக்கு மகிழ்ச்சியான குடும்பத்தைக் கொண்டிருந்தார். படித்த மனைவி, அழகான மகள். ஆனால், வெளியே பணிபுரிய வேண்டியிருப்பதால் Duoji அவர்களை கவனிக்க முடியவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன், குடும்ப சுமையைத் தாங்க முடியாமல், அவரது மனைவி அவருடன் மண முறிவு செய்தார். இது வரையிலும், Duoji மனதில் என்றுமே நீங்காத துன்பம், இது. ஏனெனில், அவர், தமது மனைவியையும் மகளையும் மிக மிக நேசிக்கின்றார். இருப்பினும், வேலை என்று வந்து விட்டால் அவரால் தட்டிக்கழிக்க முடியவில்லையே.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, திபெத்தின் வடப்பகுதியில் மனிதன் இல்லாத பிரதேசத்திலிருந்து வட திபெத்தின் உயர் மலைகள்-பள்ளத்தாக்குகள் வரை, Duoji கிட்டத்தட்ட திபெத்தின் மலைகள் ஆறுகளுக்கு ஊடாக சென்றுள்ளார். அவரும் இதர நிபுணர்களும் சேர்ந்து திபெத்தின் ஒரு சுரங்கம் பற்றி எழுதிய ஆய்வுக்கட்டுரையின் சீன மொழி மற்றும் ஆங்கில மொழி ஆக்கம், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெளியிடப்பட்டுள்ளது. அன்றி தேசிய அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத்துக்கான இரண்டாவது பரிசை அவர் பெற்றிருக்கின்றனர். அவர் பதிப்பித்துள்ள திபெத் Yang Ba Jing நில வெப்ப வயல் வளர்ச்சி பற்றிய ஆய்வு அறிக்கையும் தேசிய பரிசை பெற்றது. தவிரவும், "திபெத் தன்னாட்சிப் பிரதேச முன்னேறிய பணியாளர்", "தேசிய நிலை நிலவியல் சுரங்க துறையின் தலைசிறந்த அறிவியல் தொழில் நுட்ப பணியாளர்" முதலிய விருதுகளையும் Duoji பெற்றிருக்கின்றார். கனிம வள படிவு அளவை மதிப்பிடும் முதலாவது வல்லுநர்களில் அவரும் ஒருவராவார். சர்வதேச நில வெப்ப சங்கத்தில் சீன உறுப்பினர்களில் அவரும் சேர்க்கப்பட்டுள்ளார்.

திபெத்தின் நிலவியல் கனிமப் பொருள் பற்றி அவர் கூறியதாவது

"யலுசஞ்புசியாங் ஆற்று கரையோரம், திபெத்-சிங் ஹை இருப்புப்பாதை பிரதேசம், அ லி பிரதேசம் எங்கும் செழிப்பான நில வெப்ப கனிம வளம் இருக்கின்றது. புதிய எரியாற்றல் என்ற வகையில் நில வெப்பம் மேன்மேலும் விரிவாக பயன்படுத்தப்படுகின்றது." என்றார் அவர்.


1  2  3