• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-17 10:47:59    
11வது Bainqen Erdini Qoigyijabu

cri

திபெத் வழி புத்த மதத்தில், Bainqen என்றால், இம்மதத்தின் தலைவர்களில் ஒருவராவார், புத்தமத நம்பிக்கை கொண்டுள்ள மக்களிடையே ஈடிணையற்ற தகுநிலை உடையவர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு 5 வயதான 11வது Bainqen Erdini Qoigyijabu, மத சமயத்தின் படி பதவி ஏற்றார். பத்து ஆண்டுகள் உருண்டோடின. அவர்தம் வளர்ச்சி எப்படி என்பதை அறிய, எமது செய்தியாளர் அவரைப் பேட்டி கண்டார். அவரது ஒரு நாள் வாழ்வு பற்றி தெரிந்து கொள்வோம்.

அதிகாலை 6 மணி 30 நிமிடத்துக்கு அவர் எழுந்திருந்து படுக்கையைச் சீராக்குவார். முதலில், தம் அறையிலுள்ள சாக்கியமுனி சிலைக்கு முன்னால் மூன்று முறை குனிந்து தரையில் தலை படும் வகையில் வழிபாடு செய்து விட்டு திருமறையை ஓதத் துவங்குவார். கடந்த பத்து ஆண்டுகளில் நாள்தோறும் அவர் செய்ய வேண்டிய பணி, இதுவாகும்.

16 ஆண்டுகளுக்கு முன், பத்தாவது Bainqen திபெத்தில் மரணமடைந்தார். உயிருள்ள புத்தரின் மறுபிறப்பு, திபெத் வழி புத்த மதத்தின் தனித்தன்மை வாய்ந்த கையேறுதல் முறையாகும். பத்தாவது Bainqenஇன் மறுபிறப்பு குழந்தையை கண்டுபிடிக்கும் பணி, உடனுக்குடன் புத்த மத ஒழுங்கின் படி கண்டிப்பான முறையில் துவங்கியது. பல புத்த பெரியார்கள் குழுவாகி, சீனாவின் திபெத் பிரதேசத்தில் ரகசிய முறையில் மறுபிறப்பு குழந்தையை தேட சென்றனர். 6 ஆண்டுகளுக்குப் பின், 28 ஆயத்த நிலை குழந்தைகளில் இறுதியாக, Gyantsen Norpo எனும் பெயரிட்ட குழந்தை, பத்தாவது Bainqenயின் மறுபிறப்பு குழந்தை என உறுதிப்படுத்தப்பட்டார்.

1995ம் ஆண்டின் ஒரு நாளில், பத்தாவது Bainqenயின் மறுபிறப்பு குழந்தையை உறுதிப்படுத்தும் வைபவம், அதாவது, தங்க கலசத்தில் சீட்டு எழுதிப் போட்டு குலுக்கி எடுக்கும் லாசாவின் Jokhang கோயிலில் சாக்கியமுனி சிலையின் முன்னால் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது, 5 வயதான Gyantsen Norpo, 11வது Bainqen Erdini பதவியைத் தக்க வைத்துக்கொண்டார். சில நாட்களுக்குப் பின், இளம் Bainqen தம் குடும்பத்தினரை விட்டு, திபெத்தின் சிகாச்சே நகரில் Tsahilhungpo கோயில் சென்று அங்கு தமது மத வாழ்வைத் துவக்கினார்.

Tsahilhungpo கோயில், திபெத் வழி புத்த மதத்தின் Gelugpa பிரிவு தெற்கு திபெத் பிரதேசத்தில் கட்டியமைத்துள்ள மிகப் பெரிய கோயிலாகும். 1447ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இக்கோயிலில் 4வது Bainqen மத வாழ்வை நடத்தத் துவங்கினார். இதற்குப் பின், தலைமுறை தலைமுறையாக Bainqen நீண்டகாலமாக வசித்து மத வாழ்வை நடத்தும் இடமாக இக்கோயில் மாறியுள்ளது. 11வது Bainqen Erdini Qoigyijabuஉம், இங்கு மத வாழ்வைத் துவக்கி, சீரான முறையில் வாழ்ந்து வருகின்றார்.

1  2  3