• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-17 10:47:59    
11வது Bainqen Erdini Qoigyijabu

cri

11வது Bainqen சென்ற இடமெங்கும், மதகுருமார்கள் அவரை ஆரவாரமாக வரவேற்றனர். அவருக்கு மதிப்பு தெரிவித்தனர். Bainqenயோ மத நம்பிக்கையுடைய மக்களுக்கு ஆசி வழங்குவதை, தமது புனித கடப்பாடு எனக் கருதினார். தனித்தனியாக மக்களைச் சந்தித்து ஆசி வழங்கும் முறையினால் மக்களின் முகத்தில் இன்பமும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்பட்டன. Bainqen தெரிவித்த நல்வாழ்த்துகளுடன் அவரது உருவப்படத்தையும் அவர்கள் பெற்றனர்.

நண்பகல் 12 மணிக்கு அவர் உணவு நேரமாகும்.

பிற்பகல் மூன்றரை மணிக்கு, 11வது Bainqen இதர பாடங்களை கற்கும் நேரம். தேவைக்கு ஏற்ப, திபெத் வழி புத்தமதயியல் கற்றுக்கொள்ளும் அதே வேளையில், ஹாங் இன மொழி, ஆங்கில மொழி, எண்ணியல் முதலிய பாடங்களையும் அவர் பயில வேண்டும்.

அனைத்து ஆசிரியர்களும், அவரை புகழ்ந்து பாராட்டினர். விவேகமிக்கவர். சளையாது படிப்பவர் என்று எல்லாம் அவர்கள் Bainqenஐப் போற்றினர். இருப்பினும், Bainqen இப்படிக் கருதவில்லை. அவர் கூறியதாவது:

"உயிருள்ள புத்தர் என்ற முறையில், புத்தமத விதிகள், வரலாறு முதலிய அறிவுகளைக் கற்றுக்கொள்வது என்பது, எனது கடமையின் தேவை. எனவே, நான் கட்டாயம் பாடுபட்டு படிக்க வேண்டும். படிப்பில் உற்சாகம் பொங்கி எழும் போது, படிப்பில் எனக்கு களைப்பு ஏற்படுவதில்லையே" என்றார் அவர்.

இரவு 7 மணிக்கு, அவர் தொலைக்காட்சி செய்திகளை கண்டுகளிப்பார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம், உள்நாட்டு வெளிநாட்டு பெரும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ளமுடியும். சில வேளையில், வரலாற்று தொடர் நாடகங்களையும் Bainqen கண்டுரசிப்பார்.

7:30க்குப்பின், Bainqen சொந்தமாகப்படிக்கும் நேரம்.


1  2  3