• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-17 10:47:59    
11வது Bainqen Erdini Qoigyijabu

cri

நாள்தோறும் காலை 8:30 முதல் 9:30 வரை 11வது Bainqen திருமறை ஓதி கற்றுக்கொள்ளும் நேரமாகும். அவரது ஒரு நாள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பகுதி, இது. Bainqenயின் திருமறைபோதனா ஆசிரியர் Jamyang Gyatso கூறியதாவது:

திபெத் வழி புத்தமத உள்ளடக்கத்தைக் கற்று, குறிப்பிடத்தக்க அளவு புலமை அடைவது எளிதல்ல. படிப்படியாகக் கற்றுத் தேற வேண்டும். தமக்கு மகிழ்ச்சி என்னவென்றால், 11வது Bainqen விவேகமிக்கவர். அயரா படிப்பாளி. வழக்கமாக மற்றவர் ஓராண்டுகாலம் செலவழித்து கற்று முடிக்கும் பாடத்தை அவர் அரை ஆண்டிலேயே முடித்துக்கொள்வார்.

காலை பத்து மணி முதல் 11 மணி வரை, Bainqen, திருமறை பற்றி விவாதத்தில் கலந்து கொள்ளும் நேரமாகும். திபெத் வழி புத்தமத கோயில் கல்வியில், திருமறை பற்றி விவாதிப்பதும், இதை மனப்பாடம் செய்வதும், விரிவான முறையில் மேற்கொள்ளப்படும் இரண்டு படிப்பு முறைகளாகும். இவற்றின் மூலம் விவேகம் தட்டி எழுப்பப்படலாம். உச்சரிப்பு திறன் உயரும். புத்தமத தொண்மை வாய்ந்த நூல்களிலான உள்ளடக்கங்களை புரிந்து கொண்டு கிரகித்துக் கொள்ளும் திறன் உயர்ந்து விடும். Bainqen செய்தியாளரிடம் கூறியதாவது:

"திருமறை பற்றி விவாதிப்பது, சுவைமிக்கது. தத்துவத்தை எடுத்துக் காட்டாக கூறுகின்றோம். தத்துவம் என்றால், பொருள்மிக்க பாடமாகும். ஆசிரியர் விளக்கிக்கூறிய பின், மாணவர்களாகிய நாங்கள் மனதில் ஆழப் பதிக்க வேண்டும். இது மட்டுமின்றி, இதை புரிந்து கொள்ள வேண்டும். திருமறை பற்றிய விவாதத்தில் சொந்த கருத்தை கூறி, பரஸ்பரம் பரிமாற்றம் செய்ய வேண்டும். எவ்வளவு புரிந்து கொள்கின்றனரோ அவ்வளவு படிப்பில் ஆர்வம் ஏற்படும்" என்றார்.

திபெத் வழி புத்தமத தலைவர் என்ற முறையில், முழுமனதுடன் புத்தமத அறிவைக் கற்றுக்கொள்ளும் அதே வேளையில், 11வது Bainqen அடிக்கடி சில முக்கிய புத்தமத நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார். அல்லது ஏற்பாடு செய்துள்ளார். அவரது 9வது வயதில், பல்வகை மதக் கருவிகளை சீராகப் பயன்படுத்த முடிந்தது. 16000 எழுத்துக்களுடைய திருமறையை மனப்பாடம் செய்ய முடிந்தது. கடந்த சில ஆண்டுகளில், பெய்சிங், சிங் ஹாங், சங் சிங் முதலிய இடங்களிலான புத்த மத கோயில்களில் முக்கிய சில வழிபாட்டு நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கினார்.

1  2  3