• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-30 18:30:54    
வூயி மலை

cri

 

பெரும்பாலான பயணிகள் மலை வளமும் நீர் வளமும் உள்ள இடங்களில் சுற்றுலா மேற்கொள்ள விரும்புகின்றனர். இத்தகைய வளம் மிக்க வூயி மலைக்கு இன்று நான் நேயர்களுடன் சேர்ந்து, சுற்றுலா செல்லப்போகிறேன். சரிதானே!
வூயி மலையின் காட்சி எழில் பற்றி குறிப்படும் போது, சீனாவின் எழுத்தாளர் ஒருவர் தமது நூலில் அமெரிக்க முதியவர் ஒருவரின் கூற்றைப் பயன்படுத்தினார். அதாவது, உலகின் எந்த ஒரு இடத்திலும் செல்லும் போது திசை தெரியாமல் இருந்தால், சீனாவின் வுச்சியென் மாநிலத்தின் வூயி மலைக்கு என்னைக் கொண்டுசெல்லுங்கள் என்றார் அவர். அமெரிக்க முதியவர் இவ்வளவு விரும்பும் மலை, தென் கிழக்கு சீனாவின் வுச்சியென் மாநிலத்தில் அமைந்துள்ளது. சீனாவில் இந்த புகழ்பெற்ற மலையை ஐ.நா.யுனெஸ்கோ அமைப்பு கடந்த நூற்றாண்டின் முடிவில் உலகப் பண்பாட்டு மற்றும் இயற்கை மரபுச் செல்வப் பட்டியலில் சேர்த்துள்ளது.

வூயி மலையை ஆறு சூழ்ந்துள்ளது. ஆறு நெடுகிலும் செங்குத்தான விசித்திரமான மலை, பளிங்கு போன்ற நீரில் பிரதிபலிக்கிறது. இது எழில் மிக்க ஓவியமொன்றை உருவாக்கியுள்ளது. வூயி மலை நகரின் சுற்றுலா பணியகத் தலைவர் யு செலான் கூறியதாவது,
மலையும் ஆறும் நன்கு இணைந்திருப்பது என்பது, வூயி மலையின் தனிச்சிறப்பாகும். பயணிகள் வூயி மலைக்குச் செல்லும் போது, தலை நிமிர்ந்துபார்த்தால் மலையைக் கண்டுகளிக்கலாம். தெளிந்த நீரைக் கையால் தொடலாம். சலசலவென்று ஓடும் நீரின் சத்தம் காதில் விழும். இது தான் சுற்றுலா உணர்வு என்றார் அவர்.
பயணிகள் மலையில் ஏறும் போது, பல ஏரிகளைக் கண்டுகளிக்கலாம். இவற்றில் தியெயு மலை ஒன்றாகும். வூயி மலையில் ஒரு பழமொழி பரவிவருகின்றது.
1  2  3