• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-30 18:30:54    
வூயி மலை

cri

அதாவது, தியெயு மலைக்குச் செல்லாவிட்டால் வூயி மலையில் சுற்றுலா மேற்கொள்ளவில்லை என்று அர்த்தம். பயணிகள் தியெயு மலைச் சிகரத்தில் நின்றவாறு தூரத்தில் பார்க்கும் போது, அதன் சுற்றுப்புறத்திலுள்ள கம்பீரமான மலைகளை மட்டுமல்ல, மலை அடிவாரத்தில் பாய்ந்து ஓடும் ஆறுகளையும் கண்டுகளிக்கலாம்.
தியெயு மலை, உண்மையில் ஒரு மாபெரும் கற்பாறையாகும். சுமார் 500 மீட்டர் உயரமும் 1000 மீட்டர் அகலமும் கொண்ட தியெயு மலை, வூயி மலைப் பகுதியில் மிகப் பெரிய கற்பாறையாகும். நீண்ட காலமாக, மழை நீர் பாய்ந்து வடிந்த அடையாளங்கள் இந்த பாறையில் காணப்படுகின்றன.
எழில் மிக்க வூயி மலைக் காட்சியினால் பண்டை கால தெய்வங்கள் இதை விட்டுச் செல்ல விரும்பவில்லை. இன்றும் பல பயணிகளையும் அது ஈர்த்துவருகின்றது. சீனாவின் தைவான் மாநிலத்தைச் சேர்ந்த மங்லின்ச்சுன் இப்பயணிகளில் ஒருவராவார்.

அவர் கூறுகின்றார்,
இந்தக் கற்பாறை தனிச்சிறப்பு வாய்ந்தது. தைவானில் இத்தகைய கற்பாறை காணப்படவில்ல. தைவானிலுள்ள மலைகள், வெறும் குன்றுகள் தான். பொதுவாக மேடை போன்றதே இருக்கும். அவ்வளவு எளிமையானது. வூயி மலை, இயற்கையின் சிறப்புப் பொருள் என்று கூறலாம். மலையின் பக்கத்தில் ஆறு ஓடுவது மிகவும் அழகானது என நான் கருதுகின்றேன் என்றார் அவர்.
வூயி மலையை, எலும்பு என்றால், ஆற்று நீரை அதன் ஆத்மா என்று கூறலாம். வூயி மலையின் அடிவாரத்தில் ஓடும் ஆறு, சியுசியெ ஆறு என்று அழைக்கப்படுகின்றது.
சியுசியெ ஆறு மேற்கிலிருந்து தொடங்கி, கிழக்கை நோக்கி மலைத்தொடர்களிடையில் சுற்றிச்சுற்றிவருகின்றது. பயணிகள் மூங்கில் படகில் ஏறிச் சென்று, வூயி மலையின் அழகான காட்சியை ரசிக்கலாம். வூயி மலையின் ஆத்மா என்று அழைக்கப்படும் சியுசியெ ஆறு எங்கே தோன்றுகிறது என்பது பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில் படகோட்டி ஹென்யுன்பு கூறியதாவது,
சியுசியெ ஆற்று நீர், அதன் மேற் பகுதியிலுள்ள இயற்கைப் பாதுகாப்பு மண்டலத்திலிருந்து வருகின்றது. அவ்விடம் எல்லாம் கன்னிக்காடு. பறவைகளின் சுவர்க்கம் என்று கருதப்படுகின்றது. பூச்சிகளின் உலகம், குரங்குகளின் பிறந்தகம் என்று கருதப்படுகின்றதுஎன்றார்.
1  2  3