• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-30 18:30:54    
வூயி மலை

cri
 

வூயி மலை இயற்கைப் பாதுகாப்பு மண்டலம், தென் கிழக்கு சீனாவில் இதுவரை மிகவும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ள அளவில் மிகப் பெரிய மத்திய ஆசிய வெப்ப மண்டல காட்டு உயிரின வாழ்க்கைத் தொகுதியாகும். சீனாவின் 5 பெரிய இயற்கைப் பாதுகாப்பு மண்டலங்களில் ஒன்றாகும். பூகோளத்தில் ஒரே அக்ஷ ரேகையில் மிகவும் நன்றாகப் பாதுகாக்கப்பட்டுள்ள பசுமையான இடம் இது. இம்மண்டலத்தின் மொத்த நிலப்பரப்பு சுமார் 560 சதுரகிலோமீட்டர் ஆகும். அதன் சுற்றுப்புறத்தில் சுமார் 20 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்புடைய கன்னிக்காட்டில் அதிகமான விலங்குகளும் தாவரங்களும் உள்ளன. இவ்விடத்தை, உலக உயிரினங்களின் ஜன்னல் என சீன மற்றும் வெளிநாட்டு உயிரியல் நிபுணர்கள் பாராட்டுகின்றனர். இங்குள்ள சூழல் மனிதருக்கு ஏற்றது. காற்று தூய்மையானது என்று பெய்சிங்கிலிருந்து வரும் பயணி சாங்லி கூறினார். அவர் மேலும் கூறியதாவது,
பாதுகாப்பு மண்டலத்தில் எங்கெங்கும் பசுமையான தாவரங்கள் காணப்படுகின்றன. மிகவும் அழகானது. பல குரங்குகளையும் காணலாம் என்றார் அவர்.


1  2  3