• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-20 22:08:43    
பெய்ஜிங் மாநகரில் புதிய உயர் தொழில் நுட்ப தொழிலின் வளர்ச்சி

cri

கடந்த ஆண்டில் பெய்ஜிங் மாநகரின் புதிய உயர் தொழில் நுட்ப தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மதிப்பு சுமார் 4 ஆயிரம் கோடி யுவானாகும். பெய்ஜிங்கின் மொத்த பொருளாதாரத்தில் இது சுமார் 10 விழுக்காடாகும். பெய்ஜிங் மாநகராட்சி அண்மையில் வெளியிட்ட புள்ளி விபரம் இதைக் காட்டுகின்றது. நிதி, தொழில் நுட்பம், திறமைசாலி உள்ளிட்ட துறைகளில், இத்தொழில் நிறுவனங்களை வளர்ப்பதற்கு கொள்கை ரீதியிலான ஆதரவையும் சிறந்த சூழலையும் பெய்ஜிங் மாநகராட்சி வழங்குவதால், தற்போது, பெய்ஜிங் மாநகர புதிய உயர் தொழில் நுட்ப உற்பத்தி பொருட்களின் சொந்தமான தயாரிப்பு நுட்பம் அதிகரித்து வருவதுடன், அவற்றின் சந்தை போட்டியாற்றலும் தொடர்ந்து வலுப்பட்டு வருகின்றது.

10 ஆண்டுகளுக்கு முன்பு, பெய்ஜிங் Hai Dian பிரதேசத்தில், Zhong Guan Cun எனும் புகழ் பெற்ற மின்னணு உற்பத்தி பொருள் வணிக சாலை அமைக்கப்பட்டது. அப்போது, இந்த சாலையில் உள்ள நிறுவனங்களில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு மின்னணு உற்பத்தி பொருட்களின் உதிரி பாகங்கள் இணைக்கப்பட்டு, பின்னர், நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டன. ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் புத்தாக்க ஆற்றல் இந்த நிறுவனங்களிடம் இல்லாமல் இருந்தது. பத்துக்கு அதிகமான ஆண்டுகளின் வளர்ச்சி மூலம், சீனாவில் மிக பெரிய அறிவியல் தொழில் நுட்ப மண்டலங்களில் ஒன்றாக இது மாறியுள்ளது. இம்மண்டலத்தில் உள்ள பல தொழில் நிறுவனங்கள், சுயேச்சையான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆற்றலை கொண்ட உயர் அறிவியல் தொழில் நுட்ப நிறுவனங்களாக வளர்ந்துள்ளன. இந்த நிறுவனங்களின் உற்பத்தி பொருட்கள் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் செல்வாக்கு பெற்றுள்ளன.

புதிய உயர் தொழில் நுட்ப தொழிலின் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக, தொடர்ச்சியான முன்னுரிமைக் கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் பெய்ஜிங் மாநகராட்சி நடைமுறைப்படுத்தியுள்ளது. பெய்ஜிங்கில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனங்களை நிறுவுமாறு உள் நாட்டு வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிப்பது, மென் பொருள், ஆன்ட்டிபயாட்டிக் மருந்து தயாரிப்பு உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கு வரி குறைப்பு மற்றும் வரி விலக்கு கொள்கையையும், அரசாங்கமே வட்டி செலுத்தும் கடனையும் வழங்கியுள்ளது.

1  2  3