• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-20 22:08:43    
பெய்ஜிங் மாநகரில் புதிய உயர் தொழில் நுட்ப தொழிலின் வளர்ச்சி

cri

பெய்ஜிங்கின் புதிய உயர் தொழில் நுட்ப தொழில் வளர்ச்சியுற்று வரும் போக்கில், Zhong Guan Cun அறிவியல் தொழில் நுட்ப பூங்கா மிகவும் முக்கியமான பங்காற்றியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், அன்னிய முதலீட்டையும், வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்கள் நாடு திரும்பி தொழில் நடத்துவதையும் ஈர்க்கும் பொருட்டு, பெய்ஜிங் மாநகராட்சி அரசின் ஆதரவுடன், இப்பூங்காவில் முன்னுரிமையுடன் கூடிய பல கொள்கைகளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பூங்காவின் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர் Zhao Mu Lan பேசுகையில், தற்போது, ஆண்டுதோறும் நடுத்தர மற்றும் சிறிய அறிவியல் தொழில் நுட்ப தொழில் நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. இவற்றில், பல தொழில் நிறுவனங்கள், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களால் நடத்தப்படுகின்றன. இம்மண்டலத்தில் உள்ள தொழில் நிறுவனங்களின் அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்க ஆற்றல் இடைவிடாமல் வலுப்பட்டு வந்துள்ளது என்று கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில், இம்மண்டலம் உருவாக்கும் உற்பத்தி மதிப்பு ஆண்டுக்கு 20 விழுக்காடு என்ற வேகத்துடன் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில், இம்மண்டலம் பெற்ற வருமானம், பெய்ஜிங்கின் புதிய உயர் தொழில் நிறுவனங்களின் மொத்த வருமானத்தில் சுமார் 80 விழுக்காடாகும் என்று Zhao Mu Lan எடுத்துக்கூறினார்.

இத்தொழிலின் விரைவான வளர்ச்சி, தொடர்புடைய தொழில்களின் வளர்ச்சியை விரைவுபடுத்தி, இதர தொழில்களின் நிலையை உயர்த்தியுள்ளது. பெய்ஜிங் மாநகரின் பொருளாதார வளர்ச்சியில் இத்தொழில் நிறுவனங்கள் நாளுக்கு நாள் முக்கிய பங்காற்றியுள்ளன என்று பெய்ஜிங் மாநகர அறிவியல் தொழில் நுட்பக் கமிட்டியின் துணை தலைவர் Yang Wei Guang செய்தியாளரிடம் கூறியதாவது:

"முதலில், தொழில் கட்டமைப்பின் சீர்ப்படுத்தலை இது விரைவுபடுத்தியுள்ளது. இதன் மூலம், பெய்ஜிங் மாநகரின் பாராம்பரிய தொழில்கள், அறிவும், தொழில் நுட்பமும் செறிந்திருக்கும் தொழில்களாக சீர்திருத்தப்பட்டுள்ளன. இரண்டாவது, பொருளாதாரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியை இது ஆதரித்து, பெய்ஜிங்கின் வளர்ச்சிக்கு சிறந்த பொருளாதார அடிப்படையை ஈட்டுள்ளது" என்றார் அவர்.


1  2  3