பெய்ஜிங் மாநகராட்சி வெளியிட்ட ஊக்க நடவடிக்கை, புதிய உயர் தொழில் நுட்ப தொழில்கள், குறிப்பாக சுயேச்சையான அறிவுசார் சொத்துரிமையைக் கொண்ட புதிய உயர் தொழில் நுட்ப தொழில்களின் வளர்ச்சியை விரைவுபடுத்தியுள்ளது என்று பெய்ஜிங் மாநகர அறிவியல் தொழில் நுட்பக் கமிட்டியின் உறுப்பினர் Li Shi Zhu செய்தியாளரிடம் கூறினார். அவர் கூறியதாவது:
"சொந்தமான தயாரிப்பு நுட்பம் இல்லாத ஒரு நிலைமையிலிருந்து, சொந்தமான தயாரிப்பு நுட்பம் பெற்ற புதிய உயர் தொழில் நுட்பக் கட்டத்தில் பெய்ஜிங் படிப்படியாக காலடி எடுத்து வைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், பெய்ஜிங்கில் சொந்தமான தயாரிப்பு நுட்பம் விரைவாக வளர்ச்சி பெற்றுள்ளது. தகவல் தொழிலில் மையம் கொண்ட CMOS CHIP தொழில் நுட்பம் வளர்க்கப்படுவது பிரதிநிதித்துவம் வாய்ந்தது" என்றார் அவர்.
பெய்ஜிங்கில், பல முக்கிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களும் உயர் கல்வி நிலையங்களும் உள்ளன. அறிவியல் ஆய்வு ஆற்றல் வலுவாக உள்ளது. திறமைசாலிகளும் ஆய்வுக்கான நிதியும் அதிகம். பெய்ஜிங்கில், புதிய உயர் தொழில் நுட்ப தொழில்களின் வளர்ச்சிக்கு சிறந்த வாய்ப்பை இவை வழங்கியுள்ளன என்று திரு Li Shi Zhu தெரிவித்தார்.
Vimicro நிறுவனத்தின் துணை தலைமை இயக்குநர் Zhang Hui செய்தியாளரிடம் பேசுகையில், இந்த நிறுவனம் நிறுவப்பட்ட 5 ஆண்டுகளில், பல Digital Multimedia கருவிகள் சொந்தமாக வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளன. அளவு மயமாக்க உற்பத்தி நனவாக்கப்பட்டுள்ளது. தற்போது, உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் இந்நிறுவனம் கொண்டுள்ள கண்டுபிடிப்புக் காப்புரிமைகளின் எண்ணிக்கை 300ஐத் தாண்டியுள்ளது. Zhang Hui கூறியதாவது:
"துவக்கத்திலிருந்து, அறிவு சார் சொத்துரிமையைப் பாதுகாப்பது, மைய தொழில் நுட்பத்தை அதிகரிப்பது, போட்டியிடும் திறனை வலுப்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. Digital multimediaக்கான பயன்பாடு ஆண்டுக்கு 70 விழுக்காட்டுக்கு மேலாக அதிகரித்து வந்துள்ளது" என்றார் அவர்.
1 2 3
|