• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-24 21:39:29    
எண்ணெய் தொழிலாளர் துர்சன்ஜிங் யேனி

cri

கிராமாய் நகரம்

சீனாவின் வட மேற்கு எல்லைப் பகுதியிலுள்ள சிங்கியாங் விகூர் தன்னாட்சிப் பிரத்சத்தில் எண்ணெய் வளம் செழிப்பாக உள்ளது. அதன் வடக்கில் கிராமாய் எனும் நகரம் அமைந்துள்ளது. மேற்கு சீனாவின் மிகப் பெரிய எண்ணெய் தளம், இதுவாகும். எண்ணெய் தொழிலாளர்கள் குழுமி வாழும் மிகப் பெரிய இடங்களில் இது ஒன்றாகும். இன்றைய நிகழ்ச்சியில் சாதாரண எண்ணெய் தொழிலாளர் துர்சன்ஜிங் யேனியின் ஒரு நாள் பணி மற்றும் வாழ்க்கையை அறிந்து கொள்வோம்.

துர்சன்ஜிங் யேனி ஒழுங்கு முறையோடு வாழ்பவர். நாள்தோறும் காலை ஏழு முப்பது மணிக்கு அவர் எழுந்திருந்து அரை மணி நேரம் உடல் பயிற்சியில் ஈடுபடுவார். அப்போது ஒரு பாட்டு பாடுவார். நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் அன்பு மிகுந்த விகுர் நாட்டுப் புறப்பாடலை அவர் மிகவும் விரும்பி பாடுவார். காலை 9 மணிக்கு தொழிற்சாலைக் குழுச் சென்று தமது ஒருநாள் வேலையைத் துவக்குவார்.

குள்ளமான இந்த விகுர் இன இளைஞர் கிராமாயில் பிறந்தவர். இவ்வாண்டு 30 வயதாகும் அவர், எண்ணெய் தொழிலாளர் என்ற பணியைத் தேர்ந்தெடுத்தற்கு எண்ணெய் தொழிலாளரான அவருடைய தந்தை ஒரு காரணமாக விளங்குகின்றார். சிறு வயதிலிருந்தே எண்ணெய்க் கிணறு தோண்டுவது பற்றி தந்தை அடிக்கடி கதை சொல்லியதை அவர் கேட்டு வந்தார். வளர்ந்த பின் தந்தையின் பணியைக் ஏற்று ஒரு தலைசிறந்த தொழிலாளராக வளர்ந்துள்ளார்.

அவர் பணிபுரியும் கிணறு தோண்டும் நிறுவனம் கண்கொள்ளாத பாலைவளத்தில் உள்ளது. கிராமாய் நகர்ப் பிரதேசத்திலிருந்து 20 கிரோமீட்டல் தொலைவில் இப்பாலைவனம் அமைந்துள்ளது. ஒரு நாள் எமது செய்தியாளர் துர்சன்ஜிங் யேனியுடன் எண்ணெய்க் கிணறு தோண்டப்படும் இடத்திற்கு போனார். உயரமான கிணறு கோபுரம் வசந்த கால சூரிய ஒளியில் ஒளிமயமாகக் காணப்பட்டது.

1  2  3