• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-24 21:39:29    
எண்ணெய் தொழிலாளர் துர்சன்ஜிங் யேனி

cri

எண்ணெய் இயல் கல்லூரியில் படித்து பட்டதாரியாகி எண்ணெய் வயலில் பணி புரியத் துவங்கி பத்து ஆண்டுகளுக்கு மேல் கழிந்து விட்டது. இதற்கிடையில் நடைமுறை மூலம் கிணறு தோண்டும் தொழில் நுட்பத்தைக் கற்றுத் தேறி அனுபவங்களை பெற்றிருக்கின்றார். இதனால் கிணறு துளை குழுவின் தற்காலிக தலைவராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இளைஞர் என்ற முறையில் பணி பற்றிய அவரது கருத்திலும் இளமைத் துடிப்பு வெளிப்படுகின்றது. நவீன முறையில் கிணறு துளைக் குழுவை நிர்வகிக்க வேண்டும் என்று அவர் முன்னொழிந்துள்ளார். தற்போது சமூகம் விரைவாக வளர்ந்து வருகின்றது. ஆண்டுக்காண்டு அறிவு புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. தொழிலாளர்களின் வேலை முறை பல்வேறு துறைகளிலான கல்வியறிவு ஆகியவை நவீன சமூகத்துக்குப் பொருந்தியவையாக இருக்க வேண்டும். இதனால் அறிவியல் முறைப்படி நிர்வாகம் நடைபெற வேண்டும். ஆட்களின் சிந்தனையை மாறச் செய்திட வேண்டும் என்றார் அவர்.

இத்தகைய நிர்வாகச் சிந்தனைக்கிணங்கச் செயல்பட்டதினால் பணியில் அவர் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளார். தொழிலாளர்களுடன் சுமுகமாக பழகினார். துர்சன்ஜிங் யேனி ஒரு சிறந்த தொழிலாளர் மட்டுமல்ல சிறந்த குழு தலைவரும் ஆவார் என்று அனைவரும் அவரைப் பாராட்டியுள்ளனர். எடுத்துக் காட்டாக கோடைகாலத்தில் பாலைவனத்தில் தட்ப வெப்ப நிலை 45 டிகிரி செஸ்ஷியஸை எட்டியது. காற்று குளிர்விப்பு எந்திரமும் பயன் தருவதில்லை.

இவ்வளவு வெப்பமான நாட்களில் தொழிலாளர்களுக்கு நோய் வராமல் தடுக்கும் வகையில் குளிர் பானங்களை நாள்தோறும் வழங்குமாறு அவர் பின்னணி சேவை பகுதிக்கு கோரிக்கை விடுத்தார். எண்ணெய் வயலில் வாழ்க்கை மிக பரபரப்பானது. இருப்பினும், தனியொரு வகையானது. இளைஞர் புத்தகப் பகுதி அவரது ஏற்பாட்டில் நிறுவப்பட்டது. சில வேளையில் கால்பந்தாட்டம் உள்ளிட்ட விளையாட்டுக்களும் நிகழும். இந்த எளிதான பண்பாட்டு விளையாட்டுக்களின் காரணமாக நீண்டகாலமாக பாலைவனத்தில் பணி புரிந்து வரும் தொழிலாளர்களுக்கு அன்பினை வழங்குகின்றன.

1  2  3