• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-24 21:39:29    
எண்ணெய் தொழிலாளர் துர்சன்ஜிங் யேனி

cri

துர்சன்ஜிங்கின் கவனமான முழுமையான பணி அவரது சகாக்களால் பாராட்டப்படுகின்றது. கிணறு துளை துறையின் மேலாளர் புராதி 30 ஆண்டுகளுக்கு மேலான பணி வயதுடைய ஒரு மூத்த தொழிலாளர் ஆவார். துர்சன்ஜிங் பற்றிய கருத்து என்ன என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த போது அவர் கூறியதாவது:

துர்சன்ஜிங்.யேனி படிப்பில் ஆர்வமிகுந்தவர். பள்ளியில் விகுர் இன மொழியை அவர் கற்றுக் கொண்டார். பணிக்காக தம் முயற்சி மூலம் ஹொங் இன மொழியயைக் கற்றுக் கொண்டு பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளார். அனைவரின் அலுவல் தரத்தை உயர்த்தும் வகையில் கண்டிப்புமிக்க கட்டுப்பாடுகளை அவர் வகுத்தார். இக்கட்டுப்பாடுகளை புரிந்து கொண்டு செயல்படுவதற்காக தொழிலாளர்களுக்கு தேர்வும் நடத்தப்படுகின்றது. தொழிலாளர்கள் மீது கவனம் செலுத்தி சீராக பழகுகின்றார். அனைவின் மீது அன்பு காட்டுகின்றார். 2002ம் ஆண்டு வெளியூரில் பணி புரிந்த போது தொழிலாளர் ஒருவர் பணியில் காயமுற்றார். அப்போது அவர் துணை குழுத்தலைவர். தாமே இத்தொழிலாளரை கவனித்து ஒரு திங்களுக்கு மேலான காலத்தில் நாள்தோறும் அவருக்கு தேயிலையும் உணவுப் பொருட்களையும் அளித்து வந்தார் என்றார்.

துர்சன்ஜின் யேனி தலைசிறந்த சாதனையை புரிந்ததற்கு சொந்த முயற்சி மட்டுமல்ல அவரது குடும்பத்தின் ஆதரவும் காரணமாகும். இன்பமான குடும்பத்தில் மனைவி மருத்துவர். அவர்களுக்கு அருமையான மகன் இருக்கின்றார். இவ்வாண்டு அவருக்கு 4 வயது. குழந்தை பிறந்ததும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கி எழுந்துள்ளது. இருப்பினும் இன்னல்களும் அதிகரித்துள்ளன. எடுத்துக்காட்டாக சில வேளையில் குழந்தை நோய்வாய்ப்பட்ட போது சுர்சன்ஜிங் யேனி தொழிற்சாலையில் இருந்து வீடு திரும்ப முடியாத வேளையில் மனைவி மட்டுமே குழந்தையைக் கவனிக்க வேண்டி ஏற்பட்டது. எனவே மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலை சர்சன்ஜிங் யேனிக்கு ஏற்பட்டது. விடுமுறை நாட்களில் தம்மால் இயன்ற அளவில் தம் மனைவி குழந்தையோடு இருப்பார்.

அந்திப் பொழுதில் தொலைவில் அமைந்துள்ள கிணறு துளை கோப்புரங்கள் கமீரமாக நிற்கின்றன. மறைந்து வரும் சூரிய ஒளியில் அவை பார்ப்பதற்கு மேலும் அருமையாக காட்சியளிக்கின்றன. எமது செய்தியாளர்க் துர்சன்ஜிங் யேனியுடன் கிணறு துளை கூட்டு நிறுவனத்தின் குடியிருப்புக்கு திரும்பினார். புத்தம் புதிய தொடர் வண்டி போன்ற புதிய வீடுகள் வரிசை வரிசையாக நிற்கின்றன. தெருக்கள் தெரு விளக்குகள் ஆகியவை ஒரு சிறிய குடியிருப்புப் பிரதேசம் ஒன்றை உருவாக்கியது போலிருக்கின்றது. செய்தியாளர் இவ்வீடுகளில் நுழைந்து அவை ஒன்றுடன் ஒன்று இணைகின்றன என்பதைக் கண்டுபிடித்தார். ஓய்வு அறை, உணவு விடுதி, குளியல் அறை, நூலகம், பண்பாட்டு பொழுது போக்கு அறை எல்லாம் இருக்கின்றன. தற்போதைய பணியை நிறைவேற்றிய பின் விரைவில் துர்சன்ஜிங் யேனி வீடு திரும்பி குடும்பத்தினர்களுடன் ஒன்று கூடுவார். இதை நினைத்து அவரது முகத்தில் அன்பு தாண்டவமாடும் சிரிப்பு காணப்பட்டது.


1  2  3