• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-04 22:19:41    
படையில் உள்ள குயில் பாசன்

cri

அழகான திபெத்

முதன்முறையாக பாசனைச் சந்தித்த போது, அவள் திபெத்தின் வடக்கு பகுதியில் கலை நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டு லாசா திரும்பியிருந்தாள். பார்ப்பதற்கு அவ்வளவு அழகற்ற அவள், இனிமையான குரலில் பாடுவார். திபெத் இனத்தவரான அவள் திபெத்தில் மிகவும் வரவேற்கப்படும் பாடகர்களில் ஒருத்தியாவார். "படையில் உள்ள குயில் என, அவள் பாராட்டப்படுகின்றார்.

திபெத் ராணுவ மண்டல ஆடல்பாடல் குழுவின் பாடகியான பாசன் கடந்த சில ஆண்டுகளில் சிங் ஹாய்-திபெத் பீடபூமியில் தோன்றியுள்ள ஒரு புதிய நட்சத்திரம். தனிச்சிறப்பியல்புடைய அவளது குரலில், அகலமான இசை விரிவு, இனிமை, உயிர்த்துடிப்பு ஆகியவை, மலை அருவி பாய்வதைப் போன்றது. உள்நாட்டு இசை வட்டாரத்தின் பொதுவான கவனத்துக்குரியது. திபெத்தில், பாசன் என்றால், அறியாதவர் ஒருவருமில்லை. திபெத்தின் மிகவும் புகழ்பெற்ற பாடகி Caidan Zhuomaஉடன் ஒப்பிடத்தக்கவர் எனவும், அவள் "இளம் Caidan Zhuoma" எனவும், மக்கள் அவளை பாராட்டுகின்றனர்.

லாசா புறநகரில் ஒரு சாதாரண விவசாயிக்குடும்பத்தில் பிறந்த அவளது அம்மா நல்ல குரல் வளம் உடையவர். உள்ளூரில் புகழ்பெற்ற ஒரு பாடகியாகத் திகழ்ந்தார். சிறு வயதில் அம்மாவுடன் சேர்ந்து ஆடுகளை மேய்க்கும் போது, அதிகமான இனிமையான மேய்ச்சல் பாடல்களையும் திபெத் இசை நாடகங்களையும் பாடக் கேட்டு, கற்று, விசாலமான புல்வெளியில் பாசன் சிறிய பறவை போல் ஆசை தீரப் பாடினார். இருப்பினும், அவரை பாடல் பாதையில் திரும்பி விட்டவர். அவளது அக்காள்-சான்தென். அப்போது சான்தென், கலை இலக்கியப் பிரச்சாரக் குழுவின் ஒருவராக இருந்தார். தமது தமக்கை, இசை மீது இவ்வளவு நேசிப்பு கொண்டுள்ளதைக் கண்டு 12 வயதான பாசனை, பிரச்சாரக்குழுவில் சேரச்செய்தார். அப்போது தமக்கையின் வயது குறைவு. இருப்பினும், அவரது பாடல் புலமை பரந்து விரிந்து காணப்பட்டது என, சாதென் நினைவுகூர்ந்தார். அவர் கூறியதாவது:

"6 வயதிலே பாசன் பாடுவதில் சிறப்பு விருப்பம் கொண்டிருந்தார். எனது அப்பா அம்மா, உற்பத்தி அணியுடன் உழைக்கும் போது பாசனும் சென்றார். பெரியவர்கள், உழைப்பின் இடைவெளியில் ஓய்வு எடுக்கும் போதெல்லாம், பாசன் கிஞ்சித்தும் அஞ்சாமல், அனைவருக்கும் முன்னால் பாடுவார்" என்றார்.

1  2  3