• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-04 22:19:41    
படையில் உள்ள குயில் பாசன்

cri

பாசன்

மாவட்ட நிலை பிரச்சார குழுவில் சேர்ந்த பின், லாசா நகரிலுள்ள கலைப் பள்ளிக்கு அவர் அனுப்பப்பட்டார். அங்கு, நான்கு ஆண்டுகளில் இசை தத்துவ அறிவைக் கற்றுக்கொண்டார். இப்படிப்பு, பாசனின் மனதில் ஆழப்பதிந்துள்ளது. பள்ளியில் சேர்ந்த துவக்கத்தில், ஹான் இன மொழி அவருக்கு தெரியாது. எழுத்துக்கள் ஏதும் அவருக்கு புரியாது. ஆகையால், ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கும் பாடம் அவருக்கு புரியவில்லை. படிப்பு மிகவும் சிரமம். ஆனால் இவையனைத்தும், அவளை அடக்கிவிடவில்லை. துவக்க நிலையிலிருந்து இசை கற்றுகொள்ளத் துவங்கினார். அவளது விடாமுயற்சி, இசை மீதான வேட்கை ஆகியவற்றினால், தலைசிறந்த மதிப்பெண்களைப் பெற்று பட்டதாரியானார். ஆசிரியர்களின் அங்கீகாரம் பெற்ற அவள், பள்ளியில் தங்கி ஆசிரியையாக பாடம் சொல்லிக்கொடுக்கும் வாய்ப்பினை பெற்றார்.

ஆனால், பாசனின் லட்சியம், அரங்கில் நின்று பாடுவதாகும். இசை தாளத்துடன் ஆடுவதாகும். அப்போது, திபெத் ராணுவ மண்டலம் அவளை படையில் சேர்த்து ராணுவத்தில் ஒரு பாடகியாக்க விரும்பியது. இருப்பினும், இதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது, பாசனுக்கு என்ன செய்வது தெரியவில்லையே.

"நான் எதை செய்ய வேண்டும் என, அப்போது தெரியவில்லை. "ராணுவ மண்டல அரசியல் ஆடல்பாடல் குழு" என்ற பெயரை அப்போது தான் நான் முதல் தடவையாகக் கேட்டேன். ஒன்றும் புரியாமல் திகைத்தேன். அக்காள் தான் மீண்டும் ஒரு முறை எனக்கு ஊக்கமளித்து, வாய்ப்பை இழக்க வேண்டாம் என்று எனக்கு அறிவுறுத்தினார்" என, பாசன் சொன்னார்.

இவ்வாறு, பாசன், ஆடல்பாடல் படைவீரராக மாறினார். அதன் பிறகு 16 ஆண்டுகள் கழிந்து விட்டன. படையில் சேர்ந்த முதல் நாளிலேயே ராணுவத்தினர் என்ற முறையில் தனக்கு கோரிக்கை விடுத்தார். படையில் அரங்கேற்ற பணி மிகவும் கடினம். கிட்டத்தட்ட ஆண்டுதோறும் நூறு முறையாவது அடிமட்டத்தில் அரங்கேற்றம் நடத்த வேண்டும். இருப்பினும் பாசன் இதற்கு அஞ்சவில்லை. அரங்கு மிகவும் எளிதானது. பெரும்பாலும் எல்லைக்காவல் நிலையத்தில் உள்ளது. அங்கு ஒளிவீசும் விளக்கு ஒளி இல்லை. அழகான பின்னணி திரை இல்லை. ஆனால், போர்வீரர்களின் உளமார்ந்த கைதட்டல், நேர்மையான மலர்ந்த முகம், ஆகியவை, அவருக்கு சக்தியூட்டி உணர்ச்சியைத் தூண்டியது.

"என்னுடைய இசையைக் கேட்டு, படைவீரர்கள் ஆரவாரம் செய்து கைதட்டும் போது, என்னை அறியாமல் பாடும் போதே கண்கணிலிருந்து கண்ணீர் வழியும். அப்போது எனது களைப்பும் மறைந்து விடும்" என்றார் பாசன்.

1  2  3