• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-04 22:19:41    
படையில் உள்ள குயில் பாசன்

cri

Caidan Zhouma

விடாமுயற்சி, அவருக்கு புகழ் வழங்குகின்றது. கடந்த சில ஆண்டுகளில் முழு படை அளவிலும் நாடளவிலும் நடைபெற்ற போட்டிகளில் அவர் பல முக்கிய பரிசுகளை பெற்றிருக்கின்றார். சீனாவின் பிரபலமான திபெத் இன பாடகியான Caidan Zhouma, பாசன் பற்றி கூறியதாவது:

"பாசன், பாட்டுக் கலையை மிகவும் நேசிக்கிறார். அன்றி, சிரமப்பட்டு படிக்கின்றார். இது, மதிப்புக்குரியது என நான் கருதுகின்றேன். திபெத்திலுள்ள இளம் பாடகர் பாடகிகளில் அவள் தலைசிறந்தவர்" என்றார்.

"படையில் உள்ள குயில்" எனப் பாராட்டப்படும் பாசன், இவ்வளவு சாதனைகளைப் பெற்றிருப்பதற்கு, அவளது குடும்பத்தினரின் ஆதரவு, காரணம். தமது குடும்பம் பற்றிக்குறிப்பிடும் போது, பாசனின் முகத்தில் இன்பமும் மனநிறைவும் தாண்டவமாடுகின்றன. கணவன், தமது பணிக்கு ஒரு உத்தரவாதம். ஆகையால், ஒவ்வொரு தடவை மனக்கவலையின்றி அரங்கேற்றமுடியும். மகனை கவனிப்பது, குடும்ப விவகாரங்களில் ஈடுபடுவது. மலர்ச்செடிகளையும் புல்களையும் வளர்ப்பது இவை எல்லாம், கணவனின் கடமை என்று பாசன் கூறினார்.

செய்தியாளருக்கு பேட்டி அளிக்கையில் அவளது கணவன் கூறியதாவது:

"பாசன் பரபரப்பாக பணிபுரிகின்றார். பாட மிகவும் விரும்புகின்றார். படை வாழ்க்கை மீதும் அன்பு கொண்டுள்ளார். அவளை மிகவும் காதலிக்கும் கனவன் என்ற முறையில், அவளது பணியைப் புரிந்து கொண்டு ஆதரிக்கின்றேன். இவ்வாறு அவள் பணியில் கவலையின்றி ஈடுபட முடியும். மேலும் மகிழ்வார்" என்றார்.


1  2  3