• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-22 07:51:33    
லாசா நகர தோட்ட பணியகத்தின் தலைவர் செள கிங் லுங்

cri

மாலை வேளையின் மங்கிய சூரிய ஒளியில், லாசா நகரில் அமைந்துள்ள போத்தல மாளிகை சதுக்கத்தின் மர நிழலில், திபெத் இன மகளிர் சு மா சிரித்து கொண்டே தமது மகன் மரங்களிடையே விளையாடுவதைக் கண்டு மகிழ்கின்றார். சதுக்கத்தில், பசுமையான புல்தரையில், எண்ணற்ற மலர்ச்செடிகள் கம்பீரமான போத்தல மாளிகைக்கு உயிரூட்டுகின்றன. லாசா நகர தோட்ட பணியாளர்களின் அயரா உழைப்பு இதற்குக் காரணமாகும். இன்றைய நிகழ்ச்சியில், இப்பணியாளர்களின் தலைவரான, லாசா நகர தோட்டப் ஆணையகத்தின் தலைவர் செள கிங் லுங் அம்மையார் பற்றி அறிந்து கொள்வோம்.

எமது செய்தியாளர் அவரது அலுவலகத்தில் நுழைந்த போது, அவரும் சில சகாக்களும் நெடுஞ்சாலையின் பாதை ஓரத்தில் பசுமையாக்கத் திட்டப்பணியை எவ்வாறு குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே நிறைவேற்றுவது என்பது பற்றி விவாதித்து கொண்டிருப்பதைக் கண்டார். இவ்வாண்டு திபெத் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 40வது ஆண்டு நிறைவாகும். பசுமையாக்கப் பணி, முந்திய ஆண்டுகளில் இருந்ததை விட கடினமாக உள்ளது. செள கிங் லுங்கின் அலுவலகம் அவ்வளவு பெரியதல்ல. இதிலுள்ள சாதனங்களும் எளிமையானவை. ஒரு அலுவல் மேசை, சில நாற்காலிகள். இவ்வளவு தான். சுவரில் தொங்க விடப்பட்டுள்ள ஒரு வெள்ளைப் பலகையில், நிறைய, பணியின் முன்னேற்றத்தைச் சித்திரிக்கும் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவர்கள் பிரச்சினையை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கையில், மேசையிலுள்ள தொலை பேசி பலமுறை ஒலித்தது.

1  2  3