• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-22 07:51:33    
லாசா நகர தோட்ட பணியகத்தின் தலைவர் செள கிங் லுங்

cri

செள கிங் லுங், மஞ்சு இனத்தவர். வட கிழக்கு சீனாவின் லேங் நிங் மாநிலத்தில் அவரது ஊர் அமைந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் படிப்பதற்காக அவர் லாசா நகருக்கு வந்தார். அங்கேயே வாழத்தொடங்கி விட்டார். திபெத் வேளாண் மற்றும் கால் நடை இயல் கல்லூரியில் பட்டதாரியான அவர், தோட்ட பணியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவ்வேலை தலத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர் பணிபுரிகிறார்.

"கடந்த சில ஆண்டுகளாக, லாசா நகரின் பசுமைமயமாக்க பணி மேலும் மேம்பட்டுள்ளது. நான் தோட்ட பணியகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருக்கின்றேன். மேல்நிலை தலைவர்களின் அக்கறை மற்றும் ஆதரவுடன் நான் விரைவாக முன்னேற்றமடைந்துள்ளேன்" என்றார்.

கடந்த பல ஆண்டுகால பணி அனுபவத்திற்குப் பின், கண்டிப்பான ஒரு தலைமை அதிகாரியாக மாறியுள்ளார். விதிகளுக்குப் புறம்பாக செயல்பட கூடாது என்பது, அவரது நிரந்தர பணி முறையாகும். பணியகத்தின் தலைவராகப் பணிபுரிய துவங்கியதும், பல்வேறு பணி முறைமைகளைப் பற்றி, அவர் முதலில் விவாதித்தார். இதன் மூலம் முந்திய பணி நிலைமையை மாற்றமுடியும் என்று அவர் நம்புகிறார்.

நாள்தோறும் வேலைக்கு, அவர் எப்பொழுதும் முன்னதாகவே வந்துவிடுகிறார். வெய்யில் கடுமையாக இருந்தாலும், மழை கொட்டினாலும் தேவைப்பட்டால், அவர் விரைவிலேயே வேலைத் தலத்துக்கு வந்து விடுவார். அவர் அடிக்கடி நாற்றங்கால் பிரிவில் தொழிலாளர்களுக்கு தோட்டக்கலை பற்றி சொல்லிக்கொடுத்து வருகின்றார்.

முன்பு, தொழிலாளர்கள், கத்திரிக்கோலால் புல்வெட்டினார்கள். இதனால் காலை முதல் இரவு வரை ஒருவர் 200 மீட்டருக்கு குறைவான பரப்பில் மட்டுமே புல்வெட்ட முடிந்தது. இப்போது, லாசா நகர் முழுவதும் இயந்திர மூலம் புல் வெட்டப்படுகிறது. பத்து நாட்களுக்குள் அனைத்து புல்லும் வெட்டப்பட்டு விடும். இதனால் தொழிலாளர்களின் வருமானம் பெரிதும் அதிகரித்துள்ளது. தற்போது, பல தொழிலாளர்கள் கார் வைத்துள்ளனர். தோட்ட பணியகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்துள்ள தொழிலாளியான ப் சென் கூறியதாவது:

"இன்று எங்கள் லாசா தோட்ட பணியகத்தின் புகழ் மேன்மேலும் உயர்ந்து வருகின்றது. தொழிலாளர்களின் நல்லவசதிகளும் அதிகரித்துள்ளன. நாங்கள் மகிழ்ந்துள்ளோம். ஏனெனில், எங்களுக்கு இத்தகைய நல்ல பணியகத் தலைவர் கிடைத்துள்ளார்" என்றார், அவர்.

1  2  3