• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-22 07:51:33    
லாசா நகர தோட்ட பணியகத்தின் தலைவர் செள கிங் லுங்

cri

தற்போது, லாசா சாலைகளில் காணப்படும் மரங்கள் மலர்கள் எல்லாம், தோட்டத் தொழிலாளர்களின் அயரா உழைப்பினால் விளைந்தவை. இது வரை, லாசா நகரின் மொத்தப் பரப்பில் 30 விழுக்காட்டுக்கு மேலான இடத்தில் பசுமைமயம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தோட்ட பணியகம் இப்பிரதேசத்தில் புகழ் பெற்றுள்ளது. இது மட்டுமின்றி, அவர்களின் பணி, இதர மாநிலங்கள்-நகரங்களிலுள்ள சகாக்களின் பாராட்டையும் பெற்றிருக்கின்றது. கடந்த ஆண்டு கிழக்கு சீனாவின் சில வளர்ந்த நகரங்களின் தோட்ட பணியகத்து பணியாளர்கள் லாசாவில் ஆய்வுப் பயணம் செய்தனர். சீரான சாலைகளும், வண்ண வண்ணத் தாவரங்களும் அவர்களின் கண்களுக்கு குளுமையாக இருந்தன. சாலைகளில் திருமறை ஓதும் லாமாக்கள் காணப்படாமல் இருந்தால், லாசா நகரம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 3700 மீட்டர் உயரமுடைய பீடபூமி நகரம் என்பதை நம்ப முடியாது என்று அவர்கள் சொன்னார்கள்.

லாசா நகரில் தட்ப வெப்ப நிலை மோசமானது. ஆகையால், நீண்டகாலமாக நகரத்தில் முளைக்கும் மர வகை, ஒரே விதமானது. இந்நிலைமையை மாற்ற, செள கிங் லுங் பல தடவை சூ சேங், பெய்சிங் முதலிய இடங்களுக்குச் சென்று, மரக் கன்றுகளை பார்வையிட்டார். உள்நாட்டு முன்னேறிய மாநிலங்கள்-நகரங்களின் பசுமைமய வளர்ச்சி நிலைமையை அறிந்து லாசா நகருக்கு ஏற்ற முறையில் பல்வகை மரக்கன்றுகளை கொண்டு வந்து அவற்றை நடச்செய்தார்.

புதிய மர வகைகள் சோதனை முறையில் வளர்க்கப்படும் போது யார் தொழிலாளர், யார் தலைவர் என்ற வித்தியாசம் தெரியாமல், செள கிங் லுங் தொழிலாளர்களுடன் சேர்ந்து உழைத்தார். லாசாவின் புகழ் பெற்ற திபெத்திய புத்தமத கோயிலான Jokhang Monasteryஇல் பசுமைமய பணி மேற்கொள்ளப்படும் போது, அவர் துணிவுடன் புத்தாக்கம் செய்து, புதிய மர வகைகளை பெருமளவில் நடச்செய்தார். நாள்தோறும் அவர் பத்து மணி நேரத்திற்கு பணி புரிகிறார். அவரும் தொழிலாளர்களும் கூட்டாக பாடுபட்டதன் விளைவாக, புதிய மர வகைகள் பீடபூமியில் நடப்பட்டு வெற்றி கண்டன. இதனால், இக்கோயிலில் தனித்தன்மை வாய்ந்த காட்சி காணப்படுகின்றது.

முன்பு, லாசா சாலைகளில் காணப்பட்ட ஒரேவிதமான பசுமைப் போக்குமாறி, இன்று பலவித பசுமை காட்சிகள் தென்படுகின்றன. நகரவாசி Kunga கூறியதாவது:

"முன்னர், எங்கள் வீட்டில் வளரும் மலர்களை மட்டுமே கண்டுகளிக்கலாம். நெடுஞ்சாலைகளின் இருமருங்கிலும் மலர்கள் செடிகள், புல்வெளி மரங்கள் எவ்வற்றையும் காண முடியாமல் இருந்தது. இப்போது நிலைமை மாறி விட்டது. வசந்தகாலம், கோடைகாலம் இலையுதிர்காலம் வித்தியாசமின்றி, மலர்களைக் கண்டு மகிழலாம். இயற்கைக் காட்சி மிக அருமை" என்றார் அவர்.


1  2  3