• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-18 09:49:14    
அந்நிய முதலீட்டை ஈர்க்கும் தியான் ஜின் மாநகர்

cri

கடந்த 80ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், வெளிநாடுகளுக்கு திறந்து விடப்பட்ட நகரங்களில், பொருளாதார மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலங்களை சீனா அமைத்து, அவற்றில் சர்வதேச நிலைக்கு ஏற்ற முதலீட்டு சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம், சீனாவில் அதிகமான அந்நிய வணிகர்களின் முதலீடுகளை ஈர்க்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, சீனாவில் 50க்கு மேற்பட்ட தேசிய அளவிலான பொருளாதார மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலங்கள் நிறுவப்பட்டன. 1984ஆம் ஆண்டில் துவங்கிய தியான் ஜின் பொருளாதார மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலம் இவற்றில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்ற ஒன்றாகும்.

தியான் ஜின் பொருளாதார மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலம், வட சீனாவின் தியான் ஜின் மாநகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. அதன் நிலப்பரப்பு சுமார் 3 லட்சம் சதுர கிலோமீட்டர். அதன் கிழக்கில் வட சீனாவில் மிகப் பெரிய துறைமுகமான தியான் ஜின் துறைமுகம் உள்ளது. அங்கிருந்து பெய்ஜிங்கிற்கு தொலைவு 140 கிலோமீட்டராகும். சீனாவில் இதர வளர்ச்சி மண்டலங்களுடன் ஒப்பிடும் போது இது வித்தியாசமானது இது விளைதிறன் இல்லாத துவர் நிலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது, 20க்கு கூடுதலான ஆண்டுகள் உருண்டோடி விட்டன. வறண்ட துவர் நிலத்தில், இப்போது குறுக்கும் நெடுக்குமான போக்குவரத்து தொடரமைப்பு, நவீன மயமாக்க ஆலை கட்டடங்கள், அருமையான பூங்காக்கள், மற்றும் புல்வெளிகள் அடர்ந்துள்ளன.

இவ்வாண்டு ஜனவரி திங்கள், வேதியியல் பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனமான, உலகில் புகழ்பெற்ற அமெரிக்காவின் Cabot நிறுவனம், சீனாவின் நிறுவனம் ஒன்றுடன் கூட்டாக முதலீடு செய்து, தியான் ஜின் பொருளாதார மற்றும் தொழில் நுட்ப மண்டலத்தில் முக்கிய தொழில் மூலப் பொருளான கார்பன் கறுப்பு உற்பத்தி செய்யும் சிறப்பு ஆலையைத் துவக்கியது. சீரான முதலீட்டு சூழ்நிலை, அவர்கள் இங்கு ஆலையை நிறுவுவதற்கு காரணமாகும் என்று Cabot நிறுவனத்தின் தலைமை இயக்குநர் Kennett F Burnes கூறினார்.

"இங்கு முதலீடு செய்வதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.ஒரு புறம், அதன் புவியியல் மேம்பாடு, எடுத்துக்காட்டாக, அது ஆழ் கடல் துறைமுகத்துக்கு அருகில் உள்ளது. மறு புறம், தியான் ஜின் பொருளாதார மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலத்தில் சிறந்த அடிப்படை வசதிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆலை, உலகில் மிக பெரிய மற்றும் முன்னேறிய உற்பத்தி ஆலையாக மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.

1  2  3