• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-18 09:49:14    
அந்நிய முதலீட்டை ஈர்க்கும் தியான் ஜின் மாநகர்

cri

இந்த வளர்ச்சி மண்டலம் நிறுவப்பட்டது முதல், அடிப்படை வசதிகளுக்கான கட்டுமானத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டின் இறுதி வரை, 4000 கோடி யுவான் இந்த துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பு பாதை, அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றினால் வசதியான போக்குவரத்து தொடரமைப்பு உருவாகிறது. நீர் சுத்திகரிப்பு ஆலை, மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட கோவையான வசதிகள், இங்குள்ள தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வலுவான உத்தரவாதம் தருகின்றன.

அதிலும், அந்நிய முதலீட்டு தொழில் நிறுவனங்களுக்கு தரமிக்க சேவையை வழங்குவது, தியான் ஜின் பொருளாதார மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். 15 ஆண்டுகளுக்கு முன்னதாக, இவ்வளர்ச்சி மண்டலத்தின் நிர்வாகம், முதலீட்டு விவகாரங்களுடன் தொடர்பான அரசுத் துறைகளுடன் சேர்ந்து, அந்நிய முதலீட்டாளர்களுக்கு வசதியான சேவையை வழங்கியது. இங்கு தொழில் நடத்தும் நிறுவனங்கள் வளர்ச்சி போக்கில் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அது உரிய நேத்தில் உதவி வழங்குகிறது.

இது பற்றி, Motorola (China) நிறுவனத்தின் பொது விவகாரப் பகுதியின் மேலாளர் சேன் லெய் கூறியதாவது—

"வளர்ச்சி மண்டலப் பொறுப்பாளர்கள் முதலீட்டாளர்களின் நோக்கில் அணுகி, தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்த அவர்களுக்கு உதவிடுகின்றனர். Motorola நிறுவனம் மற்றும் தியான் ஜின் வளர்ச்சி மண்டல நிர்வாக ஒத்துழைப்பு கமிட்டியை நாங்கள் உருவாக்கியுள்ளோம். பிரச்சினையை தீர்ப்பதில் Motorola நிறுவனத்துக்கு உதவி வேண்டுமானால், இந்த கமிட்டி தீர்வு முறையை வழங்கும். அல்லது எவ்வாறு தீர்க்க வேண்டுமென்று உத்தரவிடும். அதாவது, அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கும் வளர்ச்சி மண்டல நிர்வாகத்துக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு உருவாகியுள்ளது" என்றார் அவர்.

1  2  3